பாடகர் பென்னி தயாளா இது? ப்பாஹ் அருமையா நடனம் ஆடுறாரே – வைரலாகும் வீடியோ!
Author: Shree10 July 2023, 4:53 pm
சூப்பர் சிங்கரில் நடுவராக இருந்து பிரபலமானவர் பாடகர் பென்னி தயாள். திரைப்படப் பின்னணிப் பாடகரான இவர் மேற்கத்திய பாணியில் பாப் இசை பாடுவதில் வல்லவர். இவர் படித்துவந்த காலத்தில் எஸ்5 என்ற பெயரில் உருவான இசைக் குழுவில் சேர்ந்து பாடத் தொடங்கினார்.
ஏ. ஆர். ரகுமான் பென்னி தயாளின் திறமையைக் கண்டறிந்து வாய்ப்புக் கொடுத்தார். தொடர்ந்து நிறைய படங்களில் பாடல்களை பாடி வருகிறார். இவர் ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் பாடல்களைப் பாடி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார். இந்நிலையில் பென்னி தயாள் பரதநாட்டியம் ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அட நீங்க நல்லா பாடுவீங்கன்னு தெரியும் ஆனால், இவ்வளவு பிரம்மாதமா ஆடுவீங்கன்னு தெரியாது என கமெண்ட்ஸ் செய்து புகழ்ந்துள்ளனர். இதோ அந்த வீடியோ லிங்க்: