10 நாட்களுக்கு முன்பே மரணத்தை கணித்த பவதாரிணி – அதிர்ச்சியூட்டும் தகவல்!

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா , பவதாரிணி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார். இசை நிகழ்ச்சிக்காக இளையராஜா கடந்த 24ம் தேதி கொழும்பை வந்தடைந்தார். இதனிடையே, பவதாரணிக்கு நேற்று முன்தினம் திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பவதாரணி கொழும்பு லங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில், வியாழக்கிழமை மாலை அவர் உயிரிழந்தார். புற்றுநோயுடன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதே உயிரிழப்புக்கான காரணம் என மருத்துவமனை கூறியது.

பவதாரிணி சபரிராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இவர்களுக்கு குழந்தை பாக்கியமே இல்லை என்பதால் பவதாரணியை கணவர் பிரிந்து சென்றுவிட்டார். அதன் பின்னர் பவதாரிணி தனது அப்பா இளையராஜாவுடன் மகழ்ச்சியான நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இதனிடையே கடந்த ஓராண்டுக்கு முன் பவதாரணிக்கு பித்தப்பையில் கல் இருந்தது. அதற்காக சிகிச்சை எடுத்த போது அது, புற்றுநோயாக மாறி, சிறுநீரகத்திற்கும் பரவிவிட்டது.

இதற்காக பல சிகிச்சைகள் செய்த போதும் அதில் எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை. அனைத்து மருத்துவர்களும் கைவிட்ட நிலையில், கடைசியாகத்தான் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுவதாக அறிந்து அங்கு சென்று சிகிச்சை எடுத்தால் சரியாகும் என்ற நம்பிக்கையில் சென்றுள்ளார். ஆனால், அங்கு புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றபோதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் துரதிஷ்டாவசமாக உயிரிழந்துவிட்டார்.

தொடர்ந்து பவராதரணி குறித்து பல விஷயங்கள் செய்தியாக வெளிவந்துகொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஒரு ஷாக்கிங் தகவல் கிடைத்துள்ளது. அதாவது பாடகி பவதாரிணி 10 நாட்களுக்கு முன்பே தனது மரணத்தை கணித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆம், இறப்பதற்கு முன் நோயின் தீவிரத்தை தெரிந்துகொண்ட அவர் இலங்கை செல்வதற்கு முன் நண்பர்கள், சித்தப்பா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி, யுவன், கார்த்திக் ராஜா என அனைவரையும் சந்தித்து அவர்களுடன் நேரம் செலவிட்டாராம். அதுமட்டும் அல்லாமல் அவர்கள் அனைவருக்கும் பிடித்த பொருட்களை வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

இயக்குநராகும் SK பட வில்லன்.. ஹீரோ இவரா? அதிர்ச்சியில் கோலிவுட்!

ரவிமோகன் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், அப்படத்தில் யோகி பாபு மெயின் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

31 minutes ago

தமிழகத்திலும் ரூ.1,000 கோடி மதுபான ஊழல்.. அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழகத்திலும் மதுபான ஊழலில் ரூ.1,000 கோடி கருப்பு பணம் திமுகவுக்கு கைமாறியுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…

1 hour ago

60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!

60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…

12 hours ago

கேமியோ ரோலில் பிரபல தெலுங்கு நடிகர்..”ஜெயிலர் 2″ சம்பவம் லோடிங்.!

நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…

13 hours ago

“WHAT BRO”நான் குல்லா போடுற ஆள் இல்லை..மேடையில் விஜயை தாக்கிய பிரபலம்.!

வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…

14 hours ago

மருமகள், பேத்தியையும் விட்டுவைக்கவில்லை.. மாமியாருடன் சேர்ந்து செய்த பகீர் காரியம்!

கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…

14 hours ago

This website uses cookies.