தாய்ப்பால் குடித்து தான் வளர்ந்தார்களா இல்லையா ?… பிரபல நடிகையை கொச்சைபடுத்தி குவிந்த கமெண்ட் – கொதித்தெழுந்த சின்மயி..!
Author: Vignesh26 டிசம்பர் 2022, 4:00 மணி
நடிகை நயன்தாரா தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
நடிகை நயன்தாரா தொகுப்பாளினியாக டயானா என்ற பெயரில் ஆரம்பித்து மலையாள படத்தில் கதாநாயகியாக என்ற பெயருக்கு மாறினார்.
அதன்பின் தமிழில் ஐய்யா, சந்திரமுகி போன்ற வெற்றிப்படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.
இப்படத்தினை தொடர்ந்து அழகில் முன்னணி நடிகைகளை ஓரங்கட்டி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார் நடிகை நயன்தாரா . அத்தோடு சிம்பு, பிரபு தேவா உடனான காதலுக்கு பிறகு தன்னுடைய வாழ்க்கையை மாற்றிக்கொண்டு உச்சத்தை சினிமாவில் உழைப்பை போட்டு வந்தார் நடிகை நயன்தாரா .
அதன்பின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை எடுக்கும் அளவிற்கு நயன் தாராவின் மார்க்கெட்டும் அழகும் எகிறியது. இந்திய சினிமா ரசிகர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு தற்போது பாலிவுட் படம் வரை சென்றுள்ளார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிகை நயன்தாரா தொடர்ந்து நடித்து வருவதன் காரணமாக தான் லேடி சூப்பர்ஸ்டார் என மக்கள் கொண்டாடுகின்றனர்.
இதனிடையே, திரையரங்குகளில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில், உருவாகியுள்ள கனெக்ட்’ படம், வெளியாகவுள்ளது. சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் என பலர் நடித்துள்ள ‘கனெக்ட்’ படம், 99 நிமிடங்கள் ஓடும் எனவும், இப்படத்துக்கு இடைவெளி இல்லை என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
கனெக்ட் திரைப்படம் புரமோஷன் நிகழ்ச்சியில், நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் வந்து இருந்தார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ஒரு பிரபலமான ஊடகம் ஒன்று பகிர்ந்தநிலையில், அந்த பதிவிற்கு கீழ் பல கமெண்டுகளை நயன்தாராவின் மார்பகங்களை பற்றி மோசமாக வந்து இருந்தது.
மேலும் இப்படி ஒரு நிலையில் அந்த மோசமான கமெண்ட்களை எல்லாம் பகிர்ந்து ஒரு பெண்ணை இப்படியா விமர்சனம் செய்வது என்று சின்மயி தனது ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார்.
அதே போல இப்படி மோசமாக கமன்ட் செய்வதை கண்டித்து பெண் ஒருவர் கமண்ட் செய்து இருந்த நிலையில், அந்த கமெண்டை அந்த பக்கத்தின் admin நீக்கி இருப்பது போல தெரிகிறது. இப்படி ஒரு பெண்ணை பற்றி வரும் மோசமான கமெண்டுகளை டெலீட் செய்யாமல், மோசமான கமண்ட் செய்பர்களை தட்டி கேட்கும் நபர்களின் கமெண்டுகளை டெலீட் செய்து வருகின்றனர் என்று சின்மயி குற்றம்சாட்டி இருந்தார்.
நயன்தாரா குறித்து ஆபாசமான கமெண்ட் செய்து செருப்படி கொடுக்கும் வகையில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவியில் சின்மயி கூறியது என்னவென்றால் இது மாதிரி ஆண்கள் எல்லாம் தாய்ப்பால் குடித்து தான் வளர்ந்தார்களா இல்லையா ? என கேள்வி எழுப்பி இருந்தார்.
மேலும் அவர் எனக்கு ஆச்சரியமாக உள்ளது என்று கூறியது மட்டும் இல்லாமல் இது போன்ற ஆண்களுக்கு பெண் குழந்தை இருந்தால் அது என்ன ஆகும் மேலும் கணவன்கள் முன்பும் மகன்கள் முன்பும் அம்மாக்கள் மகளை துப்பட்ட அணிய சொல்வது கிடையாது.
ஆனால் மகளிடமோ அல்லது சகோதரிகளிடமோ இது போன்ற உணர்ச்சிகளை ஆண்களால் கட்டுப்படுத்த முடியாதா என மிகவும் கெந்தளித்து பதிவினை வெளியிட்டுள்ளார்.
2
1