என் இதயத்தில் பெரிய ஓட்டை எப்போதும் அடைக்க முடியாது.. பாடகி சித்ரா போட்ட எமோஷ்னல் பதிவு..!

Author: Vignesh
18 December 2023, 6:45 pm

பாடகி சித்ரா மறைந்த மகள் நந்தனாவின் பிறந்தநாளை முன்னிட்டு உருக்கமான பதிவை போட்டுள்ளார். இது பலரையும் சோகத்தில் மூழ்க செய்திருக்கிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை கே.எஸ்.சித்ரா என்ற கிருஷ்ணன் நாயர் சாந்த குமாரி சித்ரா பூர்வீகமாக கொண்டவர். பின்னணி பாடகரான இவர் இந்தியா முழுவதும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

chitra singer - updatenews360

இதனாலேயே பாடகி சித்ராவை ரசிகர்கள் சின்னக்குயில் சித்ரா என அன்புடன் அழைக்கின்றனர். பாடகி சித்ரா தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒரியா, இந்தி, அசாமி, வங்காளம் உள்பட பல்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடி வருகிறார்.

பாடகி சித்ரா ஆறுமுறை தேசிய விருதுகளையும், ஆறு முறை தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளையும் மற்றும் பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். அத்துடன் இந்தியாவின் உயரிய விருதான பத்மவிபூஷண் விருதையும் பாடகி சித்ரா பெற்றுள்ளார்.

chitra singer - updatenews360

கடந்த 1988-ம் ஆண்டு பாடகி சித்ரா விஜயசங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2002-ம் ஆண்டு நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்த நிலையில், 2011-ம் ஆண்டு நந்தனா நீச்சல் குளத்தில் தவறிவிழுந்து மரணமடைந்தார்.

இந்நிலையில் இன்று பாடகி சித்ரா நந்தனாவின் பிறந்தநாள் என்பதால் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

chitra singer - updatenews360

அதில் அவர், நீ என் இதயத்தை துளைத்து விட்டு சென்றுள்ளாய் என்றும், அதை என்னால் என்றும் நிரப்பவே முடியாது எனவும், நீ என்னை விட்டு போன பின் ஒவ்வொரு நாளும் நான் போன அதிகமாக இழந்து வாடுகிறேன் எனவும், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தனா என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

chitra singer - updatenews360
  • Allu Arjun bouncer arrested அல்லு அர்ஜுன் பவுன்சர் திடீர் கைது… திரையரங்கில் செய்த செயல்..வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!
  • Views: - 396

    0

    0