Oo antava Oo anta vaa.. தமிழில் அறிமுகமாகும் புஷ்பா பட பாடகி இந்திராவதி சவுகான்..! (வீடியோ)
Author: Vignesh9 December 2022, 8:00 pm
சமீபத்தில் மிகவும் பிரபலமான “ஊ அண்டா வா” தெலுங்கு பாடலை பாடிய “இந்ரவதி சௌகான்” தமிழில் அறிமுகமாகிறார்.
அறிமுக இயக்குனர் பெருமாள் காசி இயக்கத்தில் ,எல் என் எச் கிரியேஷன் க. லட்சுமிநாராயணன் தயாரிப்பில் “என்ஜாய்” என்கிற படத்தின் மூலம் தமிழில் பாடகியாக அறிமுகமாகிறார்.
“சங்கு சக்கர கண்ணு” என்கிற பாடல் மூலம் தமிழில் பாடகியாக அறிமுகமாகி இருக்கிறார். பாடலை விவேகா எழுதியிருக்கிறார்.
KM ரயான் இசையமைத்துள்ளார்.
இந்த பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.
புஷ்பா படத்தில் இவர் பாடிய “ஊ.. அண்டா” வா பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகியது போல ” சங்கு சக்கர கண்ணு”பாடலும் பெரும் வரவேற்பை பெரும் என்கிறார்.
தமிழில் பாடுவது பெரும் விருப்பமாகவுள்ளதாகவும், தொடர்ந்து தமிழில் பாட வாய்ப்புகள் வருவதாகவும் இவர் தெரிவித்தார். எல் என் எச் கிரியேசன் K. லட்சுமி நாராயணன் படத்தை தயாரித்திருக்கிறார்.