ச்சீ .. அதெல்லாம் ஒரு பாட்டா?.. சமந்தாவின் பேமஸ் பாடலை விமர்சித்த எல்.ஆர். ஈஸ்வரி..!

Author: Vignesh
9 March 2023, 11:00 am

பிரபலமான பின்னணிப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி. 1958 ஆம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் பாடி வருகிறார். பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.

பிற்காலத்தில் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி துள்ளிசைப் பாடல்களையே நிறையப் பாடினார். எழுபதுகளின் பிற்பகுதியில் இவருக்கு திரைப்பட வாய்ப்புக் குறைந்தது. இருந்தாலும் பக்திப் பாடல்களை திரைப்படங்களிலும், வெளியிலும் அதிகம் பாடி வந்தார்.

L. R. Eswari -updatenews360

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சிலம்பரசன் நடித்த 2011 திரைப்படமான ஒஸ்தி திரைப்படத்தில் “கலசலா கலசலா” என்ற தமிழ் குத்துப்பாடல் மூலம் மீண்டும் பிரபலமானார். இந்தப் பாடல் வெளியான சில நாட்களில், இது ஒரு மிகப்பெரிய வெற்றி ஆனது மற்றும் மியூசிக் பாக்ஸ் ஆபிஸின் சிறந்த பாடலாக கருதப்பட்டது.

இந்திய சினிமாவின் பிரபல பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி தமிழ் மொழியைத் தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, துளு போன்ற அனைத்து மொழிகளிலும் பாடல் பாடி அசத்தியுள்ளார்.

பிரபல பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி சினிமா பாடல்கள் மட்டுமின்றி நிறைய பக்திப் பாடல்களையும் பாடி தனக்கென பல ரசிகர்களை வைத்துள்ளார்.

L. R. Eswari -updatenews360

இந்நிலையில் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி ,” தற்போதைய காலகட்டத்தில் வரும் பாடல்கள் தனக்கு பிடிக்கவில்லை என்றும், தான் சினிமாவில் கோரஸ் பாடல்கள் பாடி தான் சினிமாவில் வந்ததாகவும், சமீபத்தில் தான் ஓ சொல்றியா மாமா பாடலை கேட்டதாகவும், அதெல்லாம் ஒரு பாடலா? பாடல் தொடக்கத்திலிருந்து முடியும் வரை ஒரே மாதிரி தான் இருக்கிறது என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

  • Mammootty replaced in Baasha Movieரஜினியுடன் மம்முட்டி நடிக்க வேண்டிய இன்னொரு படம்.. பறிபோன வாய்ப்பு!
  • Views: - 650

    2

    0