பஸ்ல கூட பாதுகாப்பே இல்ல.. நைட்டுல அந்த மாதிரி தப்பு நடந்துருச்சு.. ராஜலட்சுமி எமோஷனல்..!

Author: Vignesh
27 October 2023, 7:06 pm

பிரபல நாட்டுப்புற ஜோடி பாடகர்களான செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் சீனியர் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கி தங்களது கானா பாடல்களால் பட்டி தொட்டியெங்கும் பெருமளவில் பிரபலமானார்கள்.

senthil rajalakshmi - updatenews360

அந்த சீசனில் கானா பாடல்களை மட்டுமே பாடி செந்தில் கணேஷ் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று வெற்றியாளர் ஆனார். அதனை தொடர்ந்து செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினருக்கு படங்களில் பாடும் வாய்ப்பு குவிந்தது‌. இவர்கள் இருவரும் இணைந்து பாடிய சின்ன மச்சான் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து திருவிழாக்கள், சுபநிகழ்ச்சிகள் என கச்சேரிகளில் பாடி வருமானம் சம்பாதித்து வருகிறார்கள்.

senthil rajalakshmi

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ராஜலக்ஷ்மி, பொதுவாக நிகழ்ச்சிகளுக்கு காட்டுப்பகுதிகளில் தான் மேடை அமைத்து இருப்பார்கள். அப்போது நமக்கு தனியாக அறை வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. மேலும், மேடை அருகிலேயே ஓலை வைத்து அடைத்து ஒரு புடவையோ அல்லது எதையாவது சுற்றிக்கொண்டு தான் அங்கு உடை மாற்ற வேண்டிய நிலை இருக்கும். கச்சேரி நைட் 2 மணிக்கு நடக்கும் என்பதால், பஸ்டாண்டில் நாம புல் மேக்கப் போட்டு போயிருக்கும் போது அங்கு பார்ப்பவர்களின் பார்வை வித்தியாசமாகத்தான் இருக்கும்.‘

மேலும், பல நேரங்களில் பஸ்களில் இருந்து கூட நம்மிடம் தவறாக நடப்பதற்கு பலர் முயற்சிப்பார்கள். இதைப் பற்றி வெளியே சொன்னால் கூட ராத்திரி நேரத்தில் அந்த பொண்ணு எங்க போயிட்டு வந்திருக்குன்னு கூட யோசிக்க மாட்டாங்க. ஆனா, பிரச்சனை என்று வெளியே சொன்னால் உடனே எல்லோரும் சொல்றது அந்த நேரத்துல எதுக்கு அங்க இவ்வளவு மேக்கப் போட்டு போகணும் என்று கேள்வியாய் கேட்பாங்க என்று கூறி தனது வேதனையை ராஜலக்ஷ்மி கொட்டியுள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்