பாத்ரூம் கூட விட மாட்டாங்க… கச்சேரிகளில் நடக்கும் அவலம் குறித்து ராஜலக்ஷ்மி வேதனை!
Author: Rajesh23 December 2023, 5:00 pm
பிரபல நாட்டுப்புற ஜோடி பாடகர்களான செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் சீனியர் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கி தங்களது கானா பாடல்களால் பட்டி தொட்டியெங்கும் பெருமளவில் பிரபலமானார்கள்.
அந்த சீசனில் கானா பாடல்களை மட்டுமே பாடி செந்தில் கணேஷ் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று வெற்றியாளர் ஆனார். அதனை தொடர்ந்து செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினருக்கு படங்களில் பாடும் வாய்ப்பு குவிந்தது. இவர்கள் இருவரும் இணைந்து பாடிய சின்ன மச்சான் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து திருவிழாக்கள், சுபநிகழ்ச்சிகள் என கச்சேரிகளில் பாடி வருமானம் சம்பாதித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ராஜலக்ஷ்மி, கச்சேரிக்குக்கு செல்லும்போது ஏற்பட்ட மோசமான அனுபவத்தை குறித்து வேதனையுடன் பகிர்ந்துக்கொண்டார். அதாவது. பலமணிநேரம் மேடையில் பாடிவிட்டு இறங்கும்போது வீதிகளில் பாத்ரூம் போக கூட விடமாட்டாங்க.
வெளியில் இருக்கும் பாத்ரூமுக்கு சென்று உடை மாற்ற சொல்லுவாங்க. சூப்பரா நிகழ்ச்சி முடிந்தாலும் சில நேரங்களில் பேசிய பணத்தை கொடுக்காமல் எங்களது பெர்பார்மென்சில் குறை சொல்லி காசை குறைப்பார்கள். அது மிகுந்த வேதனையை கொடுக்கும் என ராஜலக்ஷ்மி கூறினார்.