அருவருப்பா இருக்கு.. அந்தரங்கம் பற்றி பேசிய சம்யுக்தா – விஷ்ணுகாந்தை பளார் விட்ட பிரபலம்..!
Author: Vignesh26 June 2023, 2:00 pm
பிரபல நாட்டுப்புற ஜோடி பாடகர்களான செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் சீனியர் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கி தங்களது கானா பாடல்களால் பட்டி தொட்டியெங்கும் பெருமளவில் பிரபலமானார்கள்.
அந்த சீசனில் கானா பாடல்களை மட்டுமே பாடி செந்தில் கணேஷ் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று வெற்றியாளர் ஆனார். அதனை தொடர்ந்து செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினருக்கு படங்களில் பாடும் வாய்ப்பு குவிந்தது. இவர்கள் இருவரும் இணைந்து பாடிய சின்ன மச்சான் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து திருவிழாக்கள், சுபநிகழ்ச்சிகள் என கச்சேரிகளில் பாடி வருமானம் சம்பாதித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ராஜலக்ஷ்மி, கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என பேசி இருக்கிறார். அதில் அந்தரங்க விஷயத்தை பற்றி பொது வெளியில் வந்து பேசுவது அருவருப்பாக இருக்கிறது. மேலும் இருவருக்குள் இருக்கும் விஷயத்தை வெளியில் கூற மற்றவர்களிடம் பரிதாபத்தை பெற முயற்சிக்கிறார்கள். இருவருக்கும் நடுவில் பிரச்சனை என்றால் அதை அவர்கள் மட்டுமே பேசி தீர்க்க வேண்டும் அல்லது பேசாமல் இருக்க வேண்டும் என ராஜலட்சுமி தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, சமீபத்தில் திருமணமாகி சில தினங்களில் பிரிந்துவிட்ட சீரியல் நடிகை சம்யுக்தா – விஷ்ணுகாந்த் இருவரும் மாறி மாறி மீடியாவில் படுக்கையறை தொடர்பான அந்தரங்க விஷயங்களைப் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ராஜலட்சுமியின் இந்த விமர்சனம் அவர்களை மறைமுகமாக சாடுவதாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.