சமீப நாட்களாக நட்சத்திர பிரபல ஜோடிகள் தொடர்ந்து அடுத்தடுத்து விவாகரத்து செய்து வரும் விஷயம் ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஒரு காலத்தில் ரசிகர்களின் பேவரைட் ஜோடியாகவும் மிகச்சிறந்த Couple ஆகவும் பார்க்கப்பட்டு வந்த பல ஜோடிகள் அடுத்தடுத்த விவாகரத்து அறிவித்து வருவது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து தொடர்ந்து பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இவர்களின் விவாகரத்து பேரதிர்ச்சியாக இருந்தது. இதனிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து விஷயம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் உருக்குலைய செய்தது.
இதையும் படியுங்கள்: அரவிந்த் சுவாமி போல் மாப்பிள்ளை வேணுமா? இனிமேல் அப்படி கேட்கமாட்டீங்க – அவரே சொல்லிட்டாரு!
இந்த விஷயத்தில் ஆர்த்தி மீது தவறு இருப்பதாக ஜெயம் ரவியும்… ஜெயம் ரவி மீது தவறி இருப்பதாக ஆர்த்தியும் மாறிமாறி குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் பிரபல பாடகியான சைந்தவி “தைரியமாக இருங்கள் அக்கா.
உங்களுக்காக எனது பிரார்த்தனைகள்’ என்று ஆர்த்திக்கு ஆறுதல் வார்த்தை கூறி இருக்கிறார்.காதல் கணவர் ஜிவி பிரகாஷை பிரிந்த சைந்தவி விவாகரத்தின் வலி உணர்ந்தவர். அதனால் அவர் தன்னை போல் பாதிக்கப்பட்டிருக்கும் ஆர்த்தியின் நிலைமை அறிந்து அவருக்கு ஆறுதல் வார்த்தை கூறியுள்ளார்.