10 வயசுல அஜித்தை மீட் பண்ணேன்; பேன் பாய் மோமெண்ட்; பிரபல பாடகர் சொன்ன வாவ் நியூஸ்

Author: Sudha
24 July 2024, 11:36 am

2013 ஆம் ஆண்டில் வெளிவந்த கடல் திரைப்படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் “அடியே” பாடலைப் பாடி பிறகு புகழின் உச்சத்திற்குச் சென்றவர் பாடகர் சித்ஶ்ரீராம். 2015 ஆம் ஆண்டில் ஐ திரைப்படத்தில் இடம் பெற்ற “என்னோடு நீ இருந்தால்” பாடலுக்காக தமிழில் சிறந்த பின்னணி பாடகருக்கான ஃபிலிம்பேர் விருதினை வென்றார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல பாடல்களை தனக்கே உரித்தான பாணியில் பாடி ரசிகர்களின் அபிமான பாடகராக இருக்கிறார் சித் ஸ்ரீராம்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய மிகப்பெரிய ஃபேன் பாய் மோமெண்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.தனது 10 வது வயதில் நடிகர் அஜித்தை சந்தித்ததை குறித்து மிகவும் பூரிப்புடன் சொல்லியுள்ளார். அவர் பெசன்ட் நகரில் தாத்தா பாட்டி வீட்டில் இருந்த போது அங்கு அஜித்தின் திரைப்படத்திற்கான ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அங்கு அவரை மீட் செய்து அவருடன் பேசியதாகவும் அது ஒரு ஸ்பெஷலான பேன் பாய் மொமெண்ட் என்றும் சொல்லியிருக்கிறார்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…