ப்பாஹ் ஹீரோயின் லுக்கில் அம்சமா இருக்கும் CWC சிவாங்கி – நியூ லுக்கில் வெளியிட்ட வீடியோ..!

Author: Vignesh
20 March 2024, 4:51 pm

விஜய் டிவியில் பிரபல ரியாலிட்டி ஷோவில் முக்கியமானது குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனை விட 2வது சீசனுக்கு ரசிகர்கள் ஏராளம். அதில் புகழ், சிவாங்கி, பாலா, மணிமேகலை என அனைத்து கோமாளிகளும் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்த்து விட்டனர். அந்த அளவுக்கு அனைவரும் ரசிக்கும் படியாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.

Sivaangi-updatenews360-2

இதன்மூலம் புகழ்பெற்ற சிவாங்கி, புகழ் ஆகிய இருவருமே பெரிய திரைக்கு சென்றுவிட்டனர். சிவாங்கி அண்மையில் டான் திரைப்படத்தில் நடித்திருந்தார். புகழ், எதற்கும் துணிந்தவன், என்ன சொல்ல போகிறாய் போன்ற திரைப் படங்களில் காமெடியனாக நடித்து விட்டார். தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இதை தொடர்ந்து காசேதான் கடவுளடா என்ற படத்தில் கண்ணன் இயக்கத்தில் சிவாங்கி ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார். அதே போல சமீபத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தில், வடிவேலு நடிப்பில் வெளியான படத்தில் ஷிவாங்கி நடித்து இருந்தார்.

sivaangi - updatenews360

என்னதான் பல லட்சம் பாலோவர்கள் இருந்தாலும் ஷிவாங்கியை விமர்சிக்கும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. இவர் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றத்தில் இருந்தே இவருக்கு ரசிகர்களுடன் சில ஹேட்டர்ஸ்களும் உருவாகினர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

sivaangi - updatenews360

மேலும், ஷிவாங்கியை Cringe என்று பலர் விமர்சித்து வருவதும் உண்டு. ஆனால், அதைப்பற்றி எல்லாம் அவர் பெரிதாக கவலைப்படுவது இல்லை. இப்படி ஒரு நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில், லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஹேர்கட் செய்து நியூ லுக்கில் மாறியுள்ளார். அந்த வீடியோவிற்கு, ரசிகர்கள் லைக் குவித்து வருகிறார்கள். சூப்பர் சூப்பரான கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!