ஆங்கிலோ – இந்தியன் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஆண்ட்ரியா ஜெர்மியா தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி அதன் பிறகு நடிகையாக பச்சை கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் தனது வாழ்க்கையை தொடங்கினார். அதை எடுத்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் அவரது நடிப்பு பயணத்திற்கு மைல்கல்லாக அமைந்தது .
தொடர்ந்து ஆண்ட்ரியாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. அடுத்து மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், அரண்மனை , தரமணி, துப்பறிவாளன், விஸ்வரூபம் 2 , வடசென்னை மாஸ்டர் அரண்மனை 3 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்து பிரபலமான நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார்.
இதனிடையே பல்வேறு திரைப்படங்களுக்கு பல வெஸ்டர்ன் பாடல்களை பாடிய பெருமை ஆண்ட்ரியாவுக்கே சேரும். தற்போது நடிகை ஆண்ட்ரியா அறம் படத்தின் இயக்குனரான கோபி நாயனார் இயக்கத்தில் “மனுஷி” படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல்கள் என்னவென்றால் நடிகை ஆண்ட்ரியா குறித்து பாடகி சுசித்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டிருக்கிறது.
அதாவது மேடையில் பாடும் கலாச்சாரத்தையே ஆண்ட்ரியா கெடுத்துவிட்டார். அவர் பாடும் போது கேமரா முன்வந்து இஷ்டம் போல் ஆடுவது கிளாமர் காட்டுவது போன்ற வேலை எல்லாம் செய்கிறார். அதெல்லாம் ரொம்ப மோசம்.
அவர்களைப் போன்றோர் மேடையில் பாடுவதால் தான் என்னை போன்ற கூச்சம் உடைய சிறந்த பாடகிகளுக்கு பாடுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அவரைப்போல் எல்லாரும் பாட முடியாது. அவர் பாடுவது மட்டுமில்லாமல் மேடையில் பல வேலைகளை செய்கிறார் .
இதையும் படியுங்கள்: காதலித்தும் விருப்பம் இல்லாமல் தாலி காட்டினேன் – திருமண சீக்ரெட்டை உடைத்த மாரி செல்வராஜ்!
அவர் பாடுவதை கேட்பதற்காகவா கூட்டம் செல்கிறது? அவரை பார்க்கத்தான் செல்கிறது… மேடையில் பாட வேண்டும் என்றாலே ஆடைகளும் மோசமாக இருக்க வேண்டும் என்ற கட்டமைப்பு மாறிவிட்டது. முக்கியமாக ஆண்ட்ரியா பாடும்போது எல்லோரும் என்னை பாருங்கள் என்று சொல்வது போல பாடுகிறார். அந்த பளபளப்பையும் போலி தன்மையையும் தான் மக்களும் விரும்புகிறார்கள். அந்த ரெண்டும் தான் இப்போது இருக்கிறது. எனவே சிறந்த பாடகிகள் வாய்ப்பில்லாமல் அழிந்து போகிறார்கள் என சுசித்ரா பேசியிருந்தார்.