பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர்களது மகனும் பிரபல நடிகருமான பிரேம்ஜி நிறைய தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சிம்பு மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான வல்லவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், இதனைத் தொடர்ந்து, சென்னை 600 028, சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலம் அடைந்தார்.
‘என்ன கொடுமை சார் இது? , எவ்வளவோ பண்ணிட்டோம்.. இத பண்ண மாட்டோமா?’ உள்ளிட்ட டயலாக்குகள் மூலம் இவர் பேமஸ். திரைப்படங்கள், வெப் சீரீஸ் உள்ளிட்டவைகளில் நடித்து வரும் இவர், சில பாடல்களும் பாடியுள்ளார். இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவருக்கு வயது 40-ஐ கடந்த விட்ட போதிலும், இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே வலம் வந்துகொண்டிருக்கிறார்.
பேட்டிகளிலும் திருமணம் நடக்கும் போது நடக்கும் என கூலாக பதிலளித்து வருகிறார் பிரேம்ஜி. இந்நிலையில், பிரேம்ஜியை கட்டிப்பிடித்தபடி எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு என் புருஷனுடன் மீண்டும் சேர்ந்துவிட்டேன் என பின்னணி பாடகி வினைதா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, அதன் பின்னணியின் ‘என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’ என்கிற பாடலையும் பதிவிட்டுள்ளார். இதனை பிரேம்ஜி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
இதைப்பார்த்து ஷாக் ஆன நெட்டிசன்கள், என்னது பிரேம்ஜிக்கு கல்யாணம் ஆயிடுச்சா? பிரேம்ஜியும் வினைதாவும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்களா? நிஜமாகவே இவர்கள் இருவருக்கும் கல்யாணம் ஆகிவிட்டதா? என பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவர்கள் இருவரும் சொன்னால் தான் உண்மை தெரியவரும்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.