அதற்குள் விவாகரத்தா?.. ஒரே மாதத்தில் கசந்து போன வாழ்க்கை.. – விஷ்ணுகாந்த் – சம்யுக்தா செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி…!
Author: Vignesh8 May 2023, 2:30 pm
சீரியல் நடிகை சம்யுக்தா திருமணம் ஆன ஒரு மாதத்தில் சமூக வலைதளங்களில் திருமண புகைப்படங்களை நீக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, அண்மை நாட்களாக சீரியலில் இணைந்து நடிக்கும் ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் இணைவது வழக்காக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சிற்பிக்குள் முத்து சீரியலில் நடித்து வந்த நடிகை சம்யுக்தா அதே சீரியலில் நடித்த விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தாவின் திருமணம் தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இந்த நிலையில், ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதனிடையே, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இருவரும் தங்களது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்த திருமண புகைப்படங்களை டெலிட் செய்து இருக்கிறார்கள்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் பலர் இது குறித்து விஷ்ணுகாந்திடம் கேட்க எல்லாம் விரைவில் தெரியவரும் என்று அவர் பதில் அளித்துள்ளார்.