விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு தொடர் என்றால் சிறகடிக்க ஆசையை சொல்லலாம். முத்து மீனாவை மையமாக வைத்து மிகவும் கலகலப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். நிறைய புது முகங்கள், சில பழைய நடிகர்களை வைத்து தொடங்கப்பட்ட இந்த சீரியல் 300 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் இந்த சீரியலுக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் மூலம் மக்களின் பேராதரவை பெற்ற முத்து கதாபாத்திரத்தில் நடிக்கும் வெற்றி வசந்த் மீனா திருமணத்தோடு 300 எபிசோடுகளை சிறகடிக்க ஆசை தொடர் ஒளிபரப்பானதை தொடர்ந்து, வெற்றி வசந்த் தனது இன்ஸ்டாவில் லைவில் வந்தார். தற்போது, இந்நிலையில், இந்த தொடரின் மூலம் பிரபலமான மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்துவரும் கோமதி பிரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கோமதி பிரியா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், அவர் எனக்கு சினிமாவில் நுழைய வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்தது. அந்த நேரத்தில், மாடலின் வாய்ப்பு கிடைத்த போது எனக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மாடலிங் செய்து கொண்டே சினிமா வாய்ப்பை தேடிக்கொண்டே இருந்தேன்.
ஒரு சமயத்தில் இரண்டையும் பார்த்துக் கொள்ள முடியவில்லை. அதனால், முழு நேரம் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அப்போது, ஆடிஷன் செல்லும் போது என்னை பார்த்து இந்த பொண்ணு பார்க்க பாவமா இருக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பாரா என்று எல்லோரும் யோசிப்பாங்க, பல இடங்களில் அவமானங்களை சந்தித்துள்ளேன். அதனால், சோர்ந்து விடக்கூடாது என எனக்கு நானே சொல்லிக் கொண்டே இருப்பேன் என்று கோமதிப்பிரியா தெரிவித்துள்ளார்.
மேலும், ஹோம்லி லுக்கில் சீரியல் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் கோமதி பிரியா மாடர்ன் உடையில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் குடும்ப குத்து விளக்காக இருந்த நீங்களா இப்படி ஒரு உடையில் வீடியோ வெளியிட்டது என ஷாக் ரியாக்சன் கொடுத்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் கூடுதல் வரி விதிப்பை அறிவித்ததன் எதிரொலியால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்கா…
முழு நேர அரசியலில் விஜய் தனது கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்துக்கொடுத்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக உருமாறவுள்ளார் விஜய்.…
அரியலூர் ஜெயங்கொண்டம் ஆண்டிமடத்தில் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது தமிழகத்தில் இந்துக்களுக்கு விரோதமாக செயல்படும்…
ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…
நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…
நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…
This website uses cookies.