எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க.. சிறகடிக்க ஆசை ஷூட்டிங்கில் மீனா செய்த விஷயம்..!(வீடியோ)
Author: Vignesh14 February 2024, 6:30 pm
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு தொடர் என்றால் சிறகடிக்க ஆசையை சொல்லலாம். முத்து மீனாவை மையமாக வைத்து மிகவும் கலகலப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். நிறைய புது முகங்கள், சில பழைய நடிகர்களை வைத்து தொடங்கப்பட்ட இந்த சீரியல் 300 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் இந்த சீரியலுக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் மூலம் மக்களின் பேராதரவை பெற்ற மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் கோமதி பிரியா சீரியலில் சமையல் செய்வதுபோல காட்டுவதற்காக பாத்திரத்தில் பூக்களை நிரப்பி சமையல் செய்வதுபோல நடித்திருந்தார். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இப்படித்தான் ஊரை ஏமாற்றுகிறீர்களா என கலாய்த்து கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.