‘சிறகடிக்க ஆசை’ சீரியல் நாயகனுக்கு இப்படியொரு சிக்கல்?.. யாரும் நம்பாதீங்க வீடியோவுடன் விளக்கம்..!
Author: Vignesh19 July 2024, 12:22 pm
சிறக்கடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் முத்துவிற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில், இவருடைய instagram பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ, சோசியல் மீடியாவில் தற்போது வைரல் ஆகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், பேசியுள்ள வெற்றி வசந்த் எல்லோருக்கும் நன்றி எனக்கு இதுவரைக்கும் கிடைக்காத பெயரும் புகழும் இந்த சிறகடிக்க ஆசை சீரியல் மூலமாக கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியரில், முத்து கேரக்டருக்கு நீங்கள் கொடுத்திருக்கும் ஆதரவை பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாக இருந்து வருகிறது.
அதே நேரத்தில், இன்னொரு வருத்தமான செய்தியும் உங்களிடம் இருந்து நான் பகிர்ந்து தான் ஆக வேண்டும். நான் ஆரம்பத்தில், பேஸ்புக் பயன்படுத்துகின்றேன். அப்போது, அதில் சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தேன். அதன் பிறகு, அந்த அக்கவுண்டில் இருந்து என்னுடைய புகைப்படங்களை ரிமூவ் செய்துவிட்டு அந்த அக்கவுண்டை நான் லாக் செய்துவிட்டேன். ஆனால், என்னைப் போலவே யாரோ ஒருவர் அக்கவுண்ட்டை ஓபன் செய்து பயன்படுத்தி வருகிறார்.
என்னுடைய, ரசிகர்கள் அந்த அக்கவுண்டில் உள்ளவரிடம் பேசி வருகிறார்கள் என்று எனக்கு தெரிய வந்தது. அது நான் கிடையாது என்னுடைய ஒரிஜினல் அக்கௌன்ட் அது இல்லை. நானும் அது குறித்து புகார் அளித்திருக்கிறேன். நான் இன்ஸ்டாகிராமில் மட்டும்தான் இருக்கிறேன். என்னுடைய பெயரை பேஸ்புக் பக்கத்தில் இருந்து சிலரிடம் புகைப்படங்களை அனுப்ப சொல்வதாகவும் கேள்விப்பட்டேன். தயவு செய்து யாரும் அப்படி அனுப்பி ஏமாந்து விடாதீர்கள். இவ்வாறு அந்த வீடியோவில் தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும்படியாக வெற்றி வசந்த் பேசியிருக்கிறார். ஏற்கனவே, பல பிரபலங்களின் பெயர்கள் பேஸ்புக் ஐடி உலா வருகிறது. தற்போது, சீரியல் நடிகர் வெற்றி வசந்த்தும் இந்த பிரச்சினையில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.