சீரியல்ல மட்டும் தான் ஹோம்லி.. கிளாமரில் பாலிவுட் நடிகைகளை மிஞ்சிய சிறகடிக்க ஆசை நடிகை..!

Author: Vignesh
15 June 2024, 1:47 pm

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு தொடர் என்றால் சிறகடிக்க ஆசையை சொல்லலாம். முத்து மீனாவை மையமாக வைத்து மிகவும் கலகலப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். நிறைய புது முகங்கள், சில பழைய நடிகர்களை வைத்து தொடங்கப்பட்ட இந்த சீரியல் 300 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

gomathi priya

கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் இந்த சீரியலுக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் மூலம் மக்களின் பேராதரவை பெற்றது. இந்நிலையில், இந்த தொடரின் மூலம் பிரபலமான மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்துவரும் கோமதி பிரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

gomathi priya

இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கோமதி பிரியா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், அவர் எனக்கு சினிமாவில் நுழைய வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்தது. அந்த நேரத்தில், மாடலின் வாய்ப்பு கிடைத்த போது எனக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மாடலிங் செய்து கொண்டே சினிமா வாய்ப்பை தேடிக்கொண்டே இருந்தேன்.

gomathi priya

ஒரு சமயத்தில் இரண்டையும் பார்த்துக் கொள்ள முடியவில்லை. அதனால், முழு நேரம் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அப்போது, ஆடிஷன் செல்லும் போது என்னை பார்த்து இந்த பொண்ணு பார்க்க பாவமா இருக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பாரா என்று எல்லோரும் யோசிப்பாங்க, பல இடங்களில் அவமானங்களை சந்தித்துள்ளேன். அதனால், சோர்ந்து விடக்கூடாது என எனக்கு நானே சொல்லிக் கொண்டே இருப்பேன் என்று கோமதிப்பிரியா தெரிவித்துள்ளார்.

மேலும், ஹோம்லி லுக்கில் சீரியல் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் கோமதி பிரியா மாடர்ன் உடையில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் குடும்ப குத்து விளக்காக இருந்த நீங்களா இப்படி ஒரு உடையில் வீடியோ வெளியிட்டது என ஷாக் ரியாக்சன் கொடுத்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 381

    0

    0