சிறகடிக்க ஆசை சீரியலில் வரும் பாட்டி யார் தெரியுமா? MGR-ன் ரீல் தங்கை..!
Author: Vignesh15 February 2024, 4:19 pm
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு தொடர் என்றால் சிறகடிக்க ஆசையை சொல்லலாம். முத்து மீனாவை மையமாக வைத்து மிகவும் கலகலப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். நிறைய புது முகங்கள், சில பழைய நடிகர்களை வைத்து தொடங்கப்பட்ட இந்த சீரியல் 300 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் இந்த சீரியலுக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் ஹீரோ முத்துவின் பாட்டியாக நடிகை ரேவதி நடித்து வருகிறார். இந்த சீரியலில், மக்களை கவர்ந்த கதாபாத்திரங்களில் ஒன்று முத்துவின் பாட்டி கதாபாத்திரம்.
அந்த கதாபாத்திரத்தில், கச்சிதமாக பொருந்தியிருப்பார் ரேவதி பாட்டி. சிறகடிக்க ஆசை சீரியல் மட்டுமே மௌனராகம் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரையில் கலக்கி வரும் ரேவதி பாட்டி ஒரு காலத்தில் வெள்ளி திரையிலும் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். முன்னதாக, நடிகர் சிவகுமாரின் முதல் ஜோடியாக நடித்தவர் இவர்தான். அதுமட்டுமின்றி தனி பிறவி என்கிற படத்தில் எம்ஜிஆரின் தங்கையாகவும், நடித்துள்ளார். தனது இளம் வயதிலிருந்து தற்போது, வரை 80 வயது வரை வெள்ளித்திரை சின்னத்திரை என இரண்டிலும் ரேவதி பாட்டி கலக்கி வருகிறார்.