சிறுத்தை படத்தில் நடித்த குழந்தையா இது….? என்னமா இப்படி பொசுக்குன்னு வளர்ந்திடுறீங்க!

Author: Shree
25 May 2023, 8:20 pm

சிவா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து கடந்த 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் சிறுத்தை. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். மேலும் சந்தானம் காமெடியில் கலக்கினார். அதிரடி ஆக்ஷன், எமோஷன்ஸ் , மாசான சண்டை காட்சிகள் என மசாலா திரைப்படமாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தில் நடிகர் கார்த்தியின் மகளாக நடித்தவர் பேபி ரக்ஷனா. அப்படத்தில் இவரது நடிப்பு பெருவாரியான ரசிகர்களை கவர்ந்திழுத்தது. இத்திரைப்படம் வெளியாகி சுமார் 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த பேபி ரக்ஷனா பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் மிகவும் வளர்ந்து டீனேஜ் வயதில் பெரிய பெண்ணாக வளர்ச்சி அடைந்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகி விட்டனர். அட… அந்த பாப்பாவா இது? என வியந்து கேட்டு வருகிறார்கள். மேலும் பார்ப்பதற்கு இவர் பக்கா தமிழ்ப்பெண் பேஸ் கட் இருப்பதால் இயக்குனரக்ளின் பார்வை இவர் பக்கம் திரும்பியுள்ளது. எனவே கூடிய விரைவில் ஹீரோயினாக அவதாரமெடுத்து மேலும் அதிர்ச்சி கொடுப்பார் என எதிர்ப்பார்க்கலாம்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 980

    3

    0