தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?
Author: Prasad31 March 2025, 7:20 pm
படுதோல்வி
சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் சுமாரான வரவேற்பையே பெற்று பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வியை கண்டது.
இத்தோல்வியை தொடர்ந்து சிறுத்தை சிவாவிற்கு அடுத்த திரைப்படத்திற்கான வாய்ப்பு அமைவதில் தடைகள் பல இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் சிவா இயக்கவுள்ள புதிய திரைப்படத்தை குறித்தான ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் கார்த்தி!
அதாவது சிவா, கார்த்தியை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளாராம். இத்திரைப்படத்தை கார்த்தியின் குடும்ப நிறுவனங்களில் ஒன்று தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
சிவா இதற்கு முன்பு கார்த்தியை வைத்து “சிறுத்தை” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் அவரது அடையாளமாக மாறியது. இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் கார்த்தியுடன் சிவா இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட்டை மையமாக வைத்து உருவாகவுள்ள திரைப்படம் எனவும் கூறப்படுகிறது.