தமிழ் சினிமாவையே தன்வசப்படுத்திய சகோதரிகள் : ஜெ.,வை சந்தித்து ஆசி வாங்கிய அரிய புகைப்படம் வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 February 2023, 4:31 pm

தென்னிந்திய சினிமாவை 80களில் ஆட்டிப்படைத்த இரட்டை அழகு ராட்சசிகள் உள்ளனர்.

அவர்கள் வேறு யாருமில்லை அம்பிகா, ராதா தான். தமிழ் , மலையாளம், கன்னடம் , தெலுங்கு என தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வெற்றிக் கொடி நாட்டினர்.

இந்த நிலையில் தமிழக மக்களால் மறக்கவே முடியாத ஒரு பெண்மணி என்றால் அது ஜெயலலிதா அவர்கள். இரும்பு பெண்மணி என மக்களால் கொண்டாடப்படும் இவரின் பிறந்தநாள் பிப்ரவரி 24ம் தேதி வந்தது.

அரசியல் சார்பாகவும், சினிமா துறை சார்பாகவும் பல வகையில் இவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அனைவரும் வாழ்த்து கூறி இன்ஸ்டாவில் பதிவு செய்துவர நடிகை ராதாவும் ஒரு புகைப்படம் வெளியிட்டார். அதில் ராதா மற்றும் அம்பிகா இருவரும் இணைந்து ஜெயலலிதாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் உள்ளது.

நமது நாடு எனது நினைவு செய்தாலே அதில் ஜெயலலிதா அம்மா மற்றும் இந்திரா அம்மா தான் நியாபகம் வருவார்கள். மிஸ் யூ அம்மா என பதிவு செய்துள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!