என்ன ஆச்சு சிவாங்கிக்கு..? ட்விட்டர் பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Author: Vignesh
6 March 2023, 12:30 pm

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சிவாங்கி இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். ஆனால், இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி முலம் விஜய் டிவியில் பல ஆண்டுகாலமாக இருந்து வருகிறார்.

Sivaangi-updatenews360-2

இவர் பிரபல பின்னனி பாடகியான பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் ஆவார். ஷிவாங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டாலும் அந்த நிகழ்ச்சியில் பாதியிலேயே எலிமினேட் ஆகி வெளியேறி இருந்தார். இருந்தாலும், இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

Sivaangi-updatenews360-2

இந்நிலையில், சிவாங்கி அவரின் ட்விட்டர் பக்கத்தில், “ஹலோ, எல்லாரும் எப்படி இருக்கிறீர்கள் என்றும், எல்லாரும் நன்றாக தான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்றும், “எனக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் மற்றும் சளியால் அவதிப்பட்டு வருகிறேன் எனவும், என்னால் எந்திரிக்க கூட முடியவில்லை என்றும், உங்களின் அன்பு எனக்கு புத்துணர்ச்சி தருகிறது என்றும், உங்கள் அன்பு மட்டும் இல்லையென்றால் நான் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!