இத தூக்குறதுக்கு இத்தன பேரு வேணுமா.? அலப்பறை காட்டும் சிவாங்கி.. வைரல் வீடியோ.!
Author: Rajesh11 June 2022, 1:36 pm
விஜய் டிவியில் பிரபல ரியாலிட்டி ஷோவில் முக்கியமானது குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனை விட 2வது சீசனுக்கு ரசிகர்கள் ஏராளம். அதில் புகழ், சிவாங்கி, பாலா, மணிமேகலை என அனைத்து கோமாளிகளும் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்த்து விட்டனர். அந்த அளவுக்கு அனைவரும் ரசிக்கும் படியாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.
இதன்மூலம் புகழ்பெற்ற சிவாங்கி, புகழ் ஆகிய இருவருமே பெரிய திரைக்கு சென்றுவிட்டனர். சிவாங்கி அண்மையில் டான் திரைப்படத்தில் நடித்திருந்தார். புகழ், எதற்கும் துணிந்தவன், என்ன சொல்ல போகிறாய் போன்ற திரைப் படங்களில் காமெடியனாக நடித்து விட்டார். தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
அண்மையில் சிவாங்கி தனது யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவரது உடை மிகவும் பெரியதாக இருக்கிறது. அதனை அணிந்துகொண்டு படியேறும் போது தடுமாறி விழப் பார்த்தார். உடனே அருகில் இருந்த மூன்று பேர் அந்த உடையை தூக்கி கொண்டு வந்தனர். சிவாங்கிக்கு உதவி செய்தனர்.
அப்படி அந்த உடையை சிவாங்கியை சேர்த்து மொத்தம் நான்கு பேர் சுமந்து சென்றுள்ளனர். இந்த வீடியோவை அவரே தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ மிகவும் வைரலாக பரவி வருகிறது.