சிவாஜியின் வீடு பிரபுக்கு சொந்தம்…ஜப்தி உத்தரவை எதிர்த்து ராம்குமார் மனு.!
Author: Selvan5 March 2025, 7:04 pm
வீடு என்னுடைய பெயரில் இல்லை
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் ‘ஜகஜால கில்லாடி’ என்ற படத்தை தயாரித்தார்.
இதையும் படியுங்க: போதைப்பொருள் வழக்கில் அதிரடி தீர்ப்பு…பெருமூச்சு விட்ட பிரபல நடிகை.!
இந்த படத்தின் தயாரிப்புக்காக,தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடமிருந்து ரூபாய் 3.74 கோடி கடன் பெற்றனர்,ஆண்டுக்கு 30% வட்டியுடன் திருப்பி செலுத்துவதாக ஒப்பந்தம் செய்தனர்.எனினும், இந்த கடன் தொகையை திருப்பி செலுத்தாததால், மத்தியஸ்தர் நீதிபதி ரவீந்திரன்,2024 மே மாதத்தில், வட்டியுடன் சேர்த்து ரூபாய் 9.02 கோடி செலுத்த அல்லது ‘ஜகஜால கில்லாடி’ படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின்படி,படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்க தயாரிப்பு நிறுவனம் மறுத்ததால்,தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம்,சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து பொது ஏலம் விட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில்,பதில்மனு தாக்கல் செய்ய தயாரிப்பு நிறுவனம் அவகாசம் கேட்டபோதும்,இதுவரை பதில்மனு தாக்கல் செய்யாததால்,நீதிபதி அப்துல் குத்தூஸ், சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நடிகர் துஷ்யந்தின் தந்தையான ராம்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது,சிவாஜி கணேசனின் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை,தனது சகோதரர் நடிகர் பிரபு பெயரில் தான் வீடு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனவே ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி,உரிமையாளராக இல்லையென்றால் எப்படி ஜப்தி செய்ய முடியும் எனக் கூறி,ஜப்தி உத்தரவை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்ய அனுமதியளித்ததுடன்,பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.மேலும் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 3ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது