நீங்க பாக்குற சிவாஜி வேற.. நிஜத்தில் அந்த கெட்ட பழக்கம் இருக்கு?..- என்ன இருந்தாலும் அவரும் ஒரு மனுஷன்தானே..!

Author: Vignesh
6 May 2023, 4:45 pm

சிவாஜி கணேசன் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும். ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், 1952 இல் பி. ஏ. பெருமாள் முதலியார் என்பவர் தயாரித்த பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

sivaji ganesan-updatenews360

வித விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடிப்பது இவரின் தனி திறனாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 288 படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன்.

sivaji ganesan-updatenews360

நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, சிம்மக்குரலோன் என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்படுகின்றார். நீண்ட வசனங்களை எளிதில் உள்வாங்கிக் கொண்டு அதை உணர்ச்சிபூர்வமாக திரையில் பிரதிபலிக்கும் ஆற்றல் இவருக்கு இயல்பாகவே இருந்தது.

sivaji ganesan-updatenews360

நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர், நடிப்பு பல்கலைக்கழகம் என்றும் போற்றப்படுகிறார். சரித்திரம், புராணம் , குடும்பம், சமூகம் போன்ற அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று அதில் திறம்பட நடித்தவர் சிவாஜி கணேசன்.

சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதை வென்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன். 1960 இல் எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க -ஆசிய திரைப்பட விழாவில் அந்த விருது வழங்கப்பட்டது.

sivaji ganesan-updatenews360

இந்திய அரசாங்கத்தின் பத்ம ஸ்ரீ, பத்ம பூசன் மற்றும் திரைப்பட துறையின் உயரிய விருதான தாதாசாஹெப் பால்கே விருது போன்ற விருதுகளை வென்றுள்ளார். மேலும் இவர் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது பெற்ற முதல் இந்திய நடிகரும் ஆவார்.

இதனிடையே பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனிடம், சிவாஜி கணேசனை குறித்து கூறியுள்ளார் அதில், “சிவாஜி கணேசனிடம் பிடிக்காத குணம் எதாவது இருக்கிறதா?” என்ற கேள்விக்கு ஒரு அதிர்ச்சியான பதிலை கொடுத்து இருந்தார் சித்ரா லட்சுமணன்.

Chitra Lakshmanan - updatenews360

அதில் “நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பொறுத்தவரை அவர் எப்போதாவது உற்சாகமான மனநிலையில் இருந்தால், கொஞ்சம் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவார் என்றும், அது மட்டும்தான் தனக்குப் பிடிக்காத விஷயம் என்றும், ஆனால் அவர் அப்படி கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தினாலும் யாரை பார்த்து அவர் கெட்ட வார்த்தைகளை சொல்கிறாரோ, அவர்கள் சிவாஜியின் மீது ஆத்திரப்படவும் மாட்டார்கள் எனவும், அவர் மீது கோபப்படவும் மாட்டார்கள் என்றும், ஏனென்றால் சிவாஜி கணேசன் சொல்கின்ற விதம் அப்படி இருக்கும்” என சித்ரா லட்சுமணன் தெரிவித்து இருந்தார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 1218

    10

    4