தேவர் மகனுக்கு திருமணம் செய்து வைத்த சிவாஜி… வைரலாகும் அரிய புகைப்படம்!!
Author: Vignesh18 May 2023, 2:45 pm
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர நடிகரான கமல் ஹாசன் 1978ம் ஆண்டு வாணி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் வாணி உடனான திருமண உறவை பத்து ஆண்டுக்கு பின் விவாகரத்து செய்து முறித்துக்கொண்டார்.

அதன் பிறகு 1988ம் ஆண்டு குஜராத்தி நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன். அதன் பின்னர் 2004ம் ஆண்டு கமல் சரிகாவையும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

இதையடுத்து தான் நடிகை கௌதமியுடன் திருமணம் செய்யாமலே லிவிங் முறையில் வாழ்ந்து அவரையும் பிரிந்தார். தெரிந்தே இத்தனை நடிகைகளுடன் பழகி பிரிந்துவிட்ட கமல் ரகசியமாக பல நடிகைகளுடன் உறவு வைத்திருந்ததாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.

மேலும் இது குறித்து கூறிய அவர், கமல் ஹாசன் பல மனைவிகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக இஸ்லாமியராக மாறினார் என்ற கிசுகிசுக்களும் வந்தது. அதை கமல் ஹாசன் மறுக்கவும் இல்லை என்று கூறியுள்ளார். இதன் மூலம் மன்மத லீலைகளின் மாமன்னனாக கமல்ஹாசன் இருந்து வந்தது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

இந்நிலையில் 1988ஆம் ஆண்டு நடந்த கமல் ஹாசனின் இரண்டாவது திருமணத்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் முன் நின்று நடத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.