சிவாஜி கணேசனின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?.. இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்..!
Author: Vignesh9 February 2024, 12:10 pm
சிவாஜி கணேசன் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும். ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், 1952 இல் பி. ஏ. பெருமாள் முதலியார் என்பவர் தயாரித்த பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
வித விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடிப்பது இவரின் தனி திறனாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 288 படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன்.
பராசக்தியில் அறிமுகமான சிவாஜி சூப்பர் ஸ்டார் ரஜினியின் படையப்பா படத்துடன் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது மகன் பிரபு தமிழில் முன்னணி நடிகராக வளம் வந்ததோடு இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
முன்னதாக, சிவாஜி கணேசனின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் நாம் பார்த்திருப்போம். அவருடைய மகன், பேரன்கள் என எல்லோரையும் நாம் பார்த்துள்ளோம். அவர்கள் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நடிகர் திலகத்தை பெற்றெடுத்த தாய் குறித்து எந்த ஒரு தகவலும் நாம் இப்போது வரை அறிந்ததில்லை. அதாவது, சிவாஜி கணேசனின் தாய் ராஜாமணி அம்மாள் அவர்களை ரசிகர்கள் பலரும் பார்த்திருக்க மாட்டார்கள். முதல் முறையாக அவரின் தாயின் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.