சம்பளத்தை பார்த்து கண்ணீர் விட்ட சிவாஜிகணேசன்… ரஜினிகாந்த் தான் காரணமா..!

Author: Selvan
20 February 2025, 1:25 pm

படையப்பா படத்தில் நடந்த அதிசயம்

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்று மக்களால் தற்போது வரை அழைக்கப்படுபவர் நடிகர் சிவாஜிகணேசன்.

இதையும் படியுங்க: விஜய்கிட்ட ‘இத’ பலபேர் எதிர்பாக்குறாங்க.. தவெக தலைவரின் நண்பர் ட்விஸ்ட்!

இவர் ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே தன்னுடைய சம்பளத்தை இவ்வளவு தான் என்று சொல்லமாட்டாராம்,மாறாக தயாரிப்பாளர் இவருடைய நடிப்பிற்கு ஏற்ப கொடுக்கும் சம்பளத்தை வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இப்படி இருக்கும் சூழலில் கே எஸ் ரவிக்குமார் இயக்கிய படையப்பா திரைப்படத்தில் சிவாஜி கணேசன் குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பார்,இப்படத்தில் ஹீரோவாக நடிகர் ரஜினிகாந்த் அசத்தியிருப்பார்,இந்த நிலையில் படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்த பிறகு படமும் விற்பனை செய்யப்பட்டது.

அதற்கு பிறகு படத்தில் நடித்து முடித்தற்கான சம்பள காசோலையை அவரிடம் கொடுத்துள்ளனர்,அதனை வாங்கி வீட்டிற்கு சென்று தனது மூத்த மகனிடம் கொடுத்துள்ளார்.அவர் வாங்கி பார்த்து அப்பா ஒரு கோடி சம்பளம் போட்டு கொடுத்துள்ளனர் என்று சொன்னவுடன்,சிவாஜிகணேசன் உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்து காசோலையை மாற்றி கொடுத்து இருக்கீங்க என்று கூறியுள்ளார்.

அதற்கு தயாரிப்பாளர் அது உங்களோட காசோலை தான்,ரஜினி சார் தான் கொடுக்க சொன்னார் என்று சொன்னவுடன்,சிவாஜி கணேசனின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வடிந்துள்ளது,அதுவரைக்கும் தான் நடிக்க கூடிய படத்தில் 30 லட்சம் வரை மட்டுமே சம்பளமாக பெற்று வந்த சிவாஜிகணேசனுக்கு,படையப்பா திரைப்படம் ஒரு கோடி சம்பளமாக கொடுத்தது அவரை சந்தோசத்தின் உச்சிக்கு கொண்டு சேர்த்துள்ளது.

  • Salman Khan security issue என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!