அனிமல் படம் சிவகார்த்திகேயனுக்கு பிடித்திருக்காம்.. அதிலும் அந்த சீன் பயங்கரமா இருந்ததாம்..!
Author: Vignesh5 March 2024, 5:32 pm
சந்திப் ரெட்டி பங்கா இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த அனிமல் எனும் ஹிந்தி படத்தில் ரன்பீர் கபூர் – ராஷ்மிகா நடித்திருந்தனர். அப்பா மகனின் சண்டை , குடும்ப பிரச்சனை , காதல் என அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்த அனிமல் திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
டீசர், ரொமான்டிக் பாடல், ட்ரைலர் என அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்தது. அண்மையில் வெளிவந்த இப்படம் உலகம் முழுக்க நல்ல வசூலை குவித்துள்ளது. படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும் நாளுக்கு நாள் நல்ல வசூலை கொடுத்தது.
முன்னதாக அனிமல் படத்தை உலக அளவில் பெரும்பாலான ரசிகர்கள் வரவேற்று இருந்தார்கள். ஆனால், தமிழகத்தில் இப்படத்தை திரை நட்சத்திரங்கள் உட்பட பலரும் கழுவி ஊற்றி கருத்துக்களை பதிவிட்டு இருந்தனர். தமிழகத்தில், மட்டுமே படுதோல்வி அடைந்த அனிமல் திரைப்படம் உலக அளவில் ரூபாய் 800 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் அனிமல் படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார். அதாவது, இயக்குனர் சந்திப் ரெட்டி பங்கா உங்களுடைய Craft எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் படங்களில் நீங்கள் இசையை பயன்படுத்தும் விதமும் எனக்கு பிடிக்கும். அனிமல் படத்தில் அது பயங்கரமாக இருந்தது. படத்தை தாண்டி நீங்க கொடுக்கும் இன்டர்வியூஸ் பயங்கரமாய் இருக்கிறது சார் ரொம்ப Straight Forword-ஆ இருக்கீங்க என்று கூறியுள்ளார்.