சிவகார்த்திகேயனின் One Side Love… காதலித்த பெண்ணை வேறொரு ஆண் உடன் பார்த்த சம்பவம்..!

Author: Vignesh
16 March 2024, 4:16 pm

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.

பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார். கடைசியாக சிவகார்த்திகேயன் அயலான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

sivakarthikeyan

இந்நிலையில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 30 நாட்களுக்குள் மீதமுள்ள நிலையில், அதற்குள் தன்னுடைய எஸ்கே 23 படத்தின் படப்பிடிப்பை துவங்கிய சிவா. தற்போது, எஸ்கே 23 படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைந்தவுடன் அமரன் படப்பிடிப்பில் இணையுள்ளார். 30 நாட்கள் இறுதி கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு பின்னர் மீண்டும் எஸ்கேப் 23 படப்பிடிப்பில் இணைவார் என்று கூறப்படுகிறது.

sivakarthikeyan-updatenews360

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் தனது ஒரு தலை காதல் குறித்து பேசி இருந்தார். இதில், கல்லூரியில் படிக்கும் பொழுது ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்ததாகவும், ஆனால் தான் காதலித்த பின் வேறொரு நபருடன் கமிட்டாகிவிட்டார். அதனால், அந்த காதல் அப்படியே போய்விட்டது. நான் சென்னையில் தொலைக்காட்சிக்கு வந்த பிறகு அந்த பெண்ணை ஒரு முறை பார்த்தேன். அவருடன் வேறொரு நபர் வந்திருந்தார். ஆனால், கூட வந்திருந்தது அந்த பெண் காதலித்த பையன் இல்லை என கலகலப்பாக அந்த பேட்டியில் பேசி இருந்தார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 216

    0

    0