தென் அமெரிக்காவில் மட்டும் சிவகார்த்திகேயனின் அமரன் படம் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் பயோபிக் திரைப்படம் அமரன். இதில், முகுந்த்தாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். மேலும், அவரது மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவி நடித்து உள்ளார்.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. கடந்த தீபாவளி திருநாள் அன்று வெளியான இந்தப் படம், 5.87 கோடி ரூபாய் வசூலைக் குவித்துள்ளது. இதுவரை மொத்தமாக 98.87 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளது. இந்திய அளவில் பார்க்கும் போது, படம் 8 நாட்களில் 122.2 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: விஜய் இடத்தை எடுத்துக்க முடியுமா? எஸ்கேப் ஆன எஸ்கே!
மேலும், சர்வதேச அளவில் 187 கோடி ரூபாய் வசூலைப் பெற்று உள்ளதாக sacnilk.com இணையதளம் தெரிவித்து உள்ளது. முக்கியமாக, தென் அமெரிக்காவில் மட்டும் 1.3 மில்லியன் வசூல் செய்துள்ளது. இதன்படி, இந்திய ரூபாய் மதிப்பில் 10.96 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அமரன் படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையிலும், போலீஸ் பாதுகாப்புடன் அமரன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…
சம்பளம் குறைப்பு காரணம் இதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தங்களை பிசிசிஐ வெளியிட உள்ளது.2025-26ஆம் ஆண்டுக்கான…
தெலுங்கு, கன்னட சினிமாக்களில் கொடி கட்டி பறந்த ராஷ்மிகா, தமிழ், இந்தி மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். பாலிவுட் சென்ற அவர்…
நடிகை ஸ்ருதி நாராயணன் விளக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும்…
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண் இன்று அவருடைய வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்த நிலையில் அவருடைய நடிப்பில்…
திருப்பூரில், ஆசையாக அழைத்த பெண் கும்பலுடன் சேர்ந்து ஒருவரின் நகை மற்றும் பணத்தை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
This website uses cookies.