உங்க இஷ்டத்துக்கும் பேசுவீங்களா? யார் யாருக்கு துரோகம் பண்ணது? கொந்தளித்த பிரபலம்!

Author: Shree
23 October 2023, 7:01 pm

கடந்த சில நாட்களாக சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமானின் சண்டை தான் சினிமாவின் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. பிரபல இசையமைப்பாளர் டி. இமான் சமீபத்திய பேட்டி ஒன்றில், ” சிவகார்த்திகேயன் தன்னை ஏமாற்றிவிட்டதாக. அவர் மிகப்பெரிய துரோகி என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், “சிவகார்த்திகேயன் கடின உழைப்பாளி என்பதற்கு மாற்று கருத்தே இல்லை. மனம் கொத்தி பறவை படத்தில் ஆரம்பித்த அவருடனான பயணம் பல படங்களில் தொடர்ந்தது. ஆனால் அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்.

imman sivakarthikeyan

அவரை நான் மன்னிக்கவே மாட்டேன். மேலும், இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று தடாலடியாக கூறினார். இவ்வளவு வெறுப்புக்கு என்ன காரணம் என கேட்டதற்கு… சம்பவத்தை வெளியில் சொல்ல முடியாது. பார்ப்பதற்கு தான் அவர் நல்ல மனிதர் என்னிடம் அன்பாக பேசிக்கொண்டே எனக்கு எதிரான வேலைகள் செய்துவந்ததை நான் தாமதமாக தான் புரிந்துக்கொண்டேன்.

எனக்கு ஏன் இப்படி துரோகம் செய்தாய்? என நான் பலமுறை கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் இந்த இடத்தில் என்னால் சொல்லமுடியாது. இந்த ஊர் என்னை நல்லவன், கெட்டவன் என என்ன சொன்னாலும் பரவாயில்லை. எனக்கு தெரியும் நான் யார் என்று… என்னை படைத்தவனுக்கு தெரியும் நான் யார் என்று என ஆதங்கப்பட்டு பேசினார். டி. இமானின் இந்த பேச்சு கோலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

d imman sivakarthiekyan

இதையெல்லாம் வைத்து பார்த்தால் சிவகார்த்திகேயன் இமானின் முதல் மனைவி மோனிகாவுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளது. இமான் முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னர் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து எந்த ஒரு படத்திலும் சேர்ந்து பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இமான் தன் மனைவியை விவாகரத்து செய்ய காரணமே சிவகார்த்திகேயன் தான் என செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக இமான் அந்த பேட்டியில்… சிவகார்த்திகேயன் எனக்கு செய்த துரோகத்தை வெளியில் சொன்னால் என் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் என கூறியது தான் அண்டர்லைன் செய்து பேசுகிறார்கள்.

இதனால் உண்மையிலே சிவகார்த்திகேயன் அவ்வளவு மோசமானவரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அந்த விஷயம் குறித்து இமான் பேசும்போது ஒரு வித பதற்றம், வருத்தம் , வலி உள்ளிட்டவை அவரது வார்த்தைகளில் காண முடிகிறது என மக்கள் பலர் அவருக்கு ஆதரவு கொடுத்து அவருக்கு ஆறுதல் அளித்து வருகிறார்கள். இதனால் மக்களுக்கு சிவகார்த்திகேயன் மீது ஒரு தவறான பிம்பம் விழுந்துள்ளது. அவர் வெகுளித்தனமாக இருப்பது போல் முகமூடி அணிந்து மிகவும் மோசமானவராக இருக்கிறார் என இமானே கூறியுள்ளதை மக்கள் கவனிக்க துவங்கியுள்ளனர்.

இதனால் உண்மையிலே சிவகார்த்திகேயன் அவ்வளவு மோசமானவரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அந்த விஷயம் குறித்து இமான் பேசும்போது ஒரு வித பதற்றம், வருத்தம் , வலி உள்ளிட்டவை அவரது வார்த்தைகளில் காண முடிகிறது என மக்கள் பலர் அவருக்கு ஆதரவு கொடுத்து அவருக்கு ஆறுதல் அளித்து வருகிறார்கள். இதனால் மக்களுக்கு சிவகார்த்திகேயன் மீது ஒரு தவறான பிம்பம் விழுந்துள்ளது. அவர் வெகுளித்தனமாக இருப்பது போல் முகமூடி அணிந்து மிகவும் மோசமானவராக இருக்கிறார் என இமானே கூறியுள்ளதை மக்கள் கவனிக்க துவங்கியுள்ளனர்.

சிவகார்த்திகேயன் உடன் இமானின் முதல் மனைவி மோனிகா நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் சிவகார்த்திகேயனின் மனைவி, இசையமைப்பாளர் இமான் என இரண்டு குடும்பமும் சேர்ந்து தான் குடும்ப நண்பர்கள் என்ற முறையில் பிரச்சனைகள் வருவதற்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் கூட ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இருந்தாலும் அவர்கள் எவ்வளவு நெருக்கமாக குடும்பமாக பழகினார்கள் என்பதை இந்த புகைப்படம் வெளிப்படுத்துகிறது.

மேலும், இது குறித்து குட்டி பத்மினி பேட்டி ஒன்றில், இமானின் முதல் மனைவி மோனிகா சொல்வது எல்லாம் பொய். அவர் சிறந்த மனிதர் , சிறந்த கணவர், சிறந்த தந்தை. தற்போது வரை இமான் ஜீவனாம்சம் கொடுத்து கொண்டிருக்கிறார். குழந்தைகளை அவர் தான் படிக்க வைக்கிறார். திருமணம் திருமணம் செய்திருக்கும் இரண்டாம் மனைவியை நாங்கள் தான் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தோம். ஆனால், மோனிகா விவாகரத்து முன்பே அவரை சந்தித்தார் என சொல்வது எல்லாம் பொய் என அந்த பேட்டியில் குட்டி பத்மினி கூறி இருக்கிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் – இமான் இருவரின் நண்பர் ஒருவர் பேட்டி ஒன்றில், யார் யாருக்கு துரோகம் செய்தது? இமான் பொதுவெளியில் தான் கடவுள் நம்பிக்கை உள்ளவர் போலவும் நியாயமானவராகவும் பேசுவார். ஆனால், அவர் தன் ஸ்டுடியோவுக்கு கோரஸ் பாட வரும் பெண்களிடம் ஆசைவார்த்தை பேசி அவர்கள் மூலமாக தன் காரியத்தை சாதித்துக்கொள்வார். இது தெரிந்து தான் மோனிகா அவருடன் சண்டையிட்டு வந்துள்ளார். ஆனால் அதை ஒரு பொருட்டாகவே மதிக்காத இமான் தொடர்ந்து தன் கீழ்த்தரமான வேலையை செய்து வந்தாராம்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மோனிகா ரிச்சர்ட் தனது குடும்ப குடும்ப நண்பரான சிவகார்த்திகேயனிடம் சென்று தன் குறையை கூறி அழுதாராம். இதையடுத்து சிவகார்த்திகேயன் இமானுக்கு அறிவுரை கூறி சேர்ந்து வாழ சொல்லி நிறைய அறிவுரை செய்தாராம். ஆனால், இமான் அவ்ரின் பேச்சை கேட்காததால் மோனிகாவிடம் இதுபோன்ற மனிதரிடம் வாழ்வதைவிட பிரிந்து செல்வதே உங்க வாழ்க்கைக்கு நல்லது என சொல்லியுள்ளார். இதைத்தான் சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார் என இமான் கூறி வருகிறார் என சிவகார்த்திகேயன் மற்றும் இமான் இருவரின் நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 815

    6

    2