பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. இவர் ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் கொடுக்க இளம் வெற்றி இயக்குனராக வலம் வந்தார். அதை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர் என்ற இடத்தை பிடித்தார்.
அதையடுத்து அண்மையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டுள்ளார். அட்லீ சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் என்பது அனைவருக்கும் தெரியும்.சிவகார்திகேயனின் அட்லீயின் ஆரம்ப காலத்தில் அவரின் குறும்படங்களில் நடித்து அவரின் வளர்ச்சிக்கு உதவியிருக்கிறார்.
இந்நிலையில் அயலான் படத்தின் ப்ரோமோஷனுக்காக தொடர்ந்து சிவகார்த்திகேயன் பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது, நிகழ்ச்சி ஒன்றில் அட்லீ குறித்து பேசிய அவர், பாலிவுட் சென்று 1200 கோடி வசூல் செய்த ஒரு பிரம்மாண்ட வெற்றிப்படத்தை கொடுத்தும் நாம் அட்லீயை கொண்டாடவில்லை. இது சாதாரண விஷயம் அல்ல. பாலிவுட்டில் அறிமுக படமே ஷாருக்கானை வைத்து இயக்கியது மட்டும் அல்லாமல் மிகப்பெரிய வெற்றி படைத்தது இந்திய அளவில் சாதனை படைத்த அட்லீயை நாம் நிச்சயம் கொண்டாடவேண்டும்.
நான் ஜவான் படத்தின் ட்ரைலரை பார்த்ததுமே இந்த படம் பயங்கர வெற்றி பெரும் என்றேன். இனிமேல் நீ இந்த பக்கமே வரமுடியாது. உன்ன அங்கே தூக்கி வச்சி கொண்டாடிடுவாங்க என்றேன். அது அப்படியே நடந்தது நடந்தது. இது வேறு யாரேனும் சாதித்தால் அவரை தூக்கி வைத்து கொண்டாடுகிறார். ஆனால், நம்ம ஊரில் ஒரு கூட்டம் அவரை கலாய்க்கிறது. ஆனால், இனிமேல் அவனை ஒன்றும் செய்ய முடியாது. என்ன ஒரு வருத்தம் என்றால், அவனும் விஜய் சாரும் சேரும் போது அதனுடைய நம்பர்ஸ், மேஜிக், பிசினஸ் எல்லாமே வேறலெவலில் இருக்கும் இப்போ அது மிஸ் ஆகுது என ஆதங்கத்துடன் கூறினார்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.