இசையமைப்பாளர் டி.இமான் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட அவருக்கு வெரோனிகா, பிளெஸிகா என இரு மகள்கள் இருக்கிறார்கள். இதற்கிடையே இமான் – மோனிகா இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இதையடுத்து அமலி உபால்டு என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார். ஒரு நேரத்தில் தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வந்த டி. இமான் பின்னர் திடீரென மார்க்கெட் சரிந்துவிட்டார். இதையடுத்து கிட்டத்தட்ட பீல்டு அவுட் ஆன இசையமைப்பாளராகி விட்டார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தன்னை ஏமாற்றிவிட்டதாக. அவர் மிகப்பெரிய துரோகி என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், “சிவகார்த்திகேயன் கடின உழைப்பாளி என்பதற்கு மாற்று கருத்தே இல்லை. மனம் கொத்தி பறவை படத்தில் ஆரம்பித்த அவருடனான பயணம் பல படங்களில் தொடர்ந்தது. ஆனால் அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்.
அவரை நான் மன்னிக்கவே மாட்டேன். மேலும், இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று தடாலடியாக கூறினார். இவ்வளவு வெறுப்புக்கு என்ன காரணம் என கேட்டதற்கு… சம்பவத்தை வெளியில் சொல்ல முடியாது. பார்ப்பதற்கு தான் அவர் நல்ல மனிதர் என்னிடம் அன்பாக பேசிக்கொண்டே எனக்கு எதிரான வேலைகள் செய்துவந்ததை நான் தாமதமாக தான் புரிந்துக்கொண்டேன்.
எனக்கு ஏன் இப்படி துரோகம் செய்தாய்? என நான் பலமுறை கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் இந்த இடத்தில் என்னால் சொல்லமுடியாது. இந்த ஊர் என்னை நல்லவன், கெட்டவன் என என்ன சொன்னாலும் பரவாயில்லை. எனக்கு தெரியும் நான் யார் என்று… என்னை படைத்தவனுக்கு தெரியும் நான் யார் என்று என ஆதங்கப்பட்டு பேசினார். டி. இமானின் இந்த பேச்சு கோலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி ஒரு பேட்டியில் கூறியதாவது, காலம் முழுக்க சிவகார்த்திகேயன் டி. இமானுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறார். ஆனால், அந்த நன்றி மறந்து சிவகார்த்திகேயன் இமானுக்கு மிகப்பெரிய துரோகம் ஒன்றை செய்துள்ளார். அதை நம்மால் வெளியே சொல்ல முடியாது. இமானாலும் கூட அதை வெளியே சொல்ல முடியாது என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், வலைப்பேச்சு நிகழ்ச்சியில் பிஸ்மி இமான் சிவகார்த்திகேயன் இடையே நடந்த மோதலுக்கு காரணம் குடும்ப பிரச்சினை தான் என்று தெரிவித்துள்ளார். மேலும், இமான்னுக்கு போன் செய்து சிவகார்த்திகேயன் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், நேருல வந்து உங்க கால்ல வேணாலும் விழுறேன். குடும்பத்தில தெரிஞ்சா பெரிய பிரச்சினையாகிவிடும் என்று சிவகார்த்திகேயன் சொல்லியிருந்ததாகவும், இதுக்கு இமான் அப்ப நீங்க எனக்கு அப்படி பண்ணப்போ குடும்பம் இல்லையா என்று போனை கட் செய்தார் என பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.