கஷ்டமான காலங்களில் என் கூட நின்னீங்க – நெப்போலியனிடம் மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன்!

Author:
7 November 2024, 3:26 pm

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக இருந்து வரும் நடிகை நெப்போலியனின் மூத்த மகன் ஆன தனுஷின் திருமணம் இன்று ஜப்பானில் கோலாகலமாக நடைபெற்றது

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நெப்போலியன் இடம் மன்னிப்பு கேட்டு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது .

அதாவது அந்த வீடியோவில் பேசி இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னால் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

Sivakarthikeyan

அதில் நெப்போலியன் சார் நீங்க எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் என்னுடைய கஷ்டமான காலங்களில் என்னுடன் இருந்தீங்க .

இந்த நேரத்தில் நான் கல்யாணத்தில் உங்களோடு இருந்து எல்லா வேலைகளையும் எடுத்து செஞ்சிருக்கணும் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் .

விரைவில் வந்த உங்கள் எல்லோரையும் நான் சந்திப்பேன். இந்த நிகழ்வு உங்க மனசு மாதிரி ரொம்ப நல்லா நடக்கட்டும் சார்… தனுஷ் தம்பி உங்களுக்கும் என்னுடைய திருமண வாழ்த்துக்கள் என அந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார் .

முன்னதாக நடிகர் நெப்போலியன் சிவகார்த்திகேயன் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது…. வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் மத்திய பகுதி திருச்சியில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய சொந்த உழைப்பால் எந்த ஒரு பின்பலமும் இல்லாமல் நடித்து இவ்வளவு சீக்கிரம் மேலே வந்துள்ளதை பாராட்ட வேண்டும்.

சிவகார்த்திகேயனுக்கு மற்றவர்கள் ஆதரவாக இருக்க வேண்டும். ஆனால் சினிமாவில் ஆரோக்கியமான போட்டி என்பது இல்லை.

அதுவும் குறிப்பாக அவருக்கு இல்லை…. இன்றைக்கு சிவகார்த்திகேயன் நடித்த படம் டாப் 5 நடிகர்கள் படத்துக்கு சமமாக உள்ளது.

மேலும் மற்றவர்கள் அதைவிட சிறந்த படத்தை கொடுக்க முயற்சிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அதை விட்டுவிட்டு சிவகார்த்திகேயன் பார்த்து பொறாமைப்படுவது அவரை இழிவாக பேசுவது சரியில்லை என நெப்போலியன் நடிகர் சிவகார்த்திகேயன் கஷ்ட காலத்தில் அவருக்கு ஆதரவாக நின்னு அவருக்கு குரல் கொடுத்தார்.

nepoleon

அதை தான் தற்போது சிவகார்த்திகேயன் நினைவு கூர்ந்து அவரது மகன் திருமணத்திற்கு போக முடியவில்லை என வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vijay TV serial actress love with CSK Player சிஎஸ்கே வீரருடன் காதல்.. இலங்கை மருமகளாகும் விஜய் டிவி சீரியல் நடிகை?!