SORRY இமான் அண்ணா.. ஒரு பயம் இருந்துகிட்டே இருக்கு; வெளிப்படையாக பேசிய சிவகார்த்திகேயன்..!

Author: Vignesh
25 June 2024, 4:19 pm

தமிழ் சினிமாவில் ஸ்டாண்ட் அப் காமெடிகளாக இருந்து தற்போது அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நாயகர்களுள் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். ஆரம்ப காலகட்டத்தில் பெரிய ஹிட் பாடல்களை கொடுத்தவர் என்றால் அது டி இமான் தான். இது ஒரு புறம் இருக்க அனிருத் சிட்டி மக்களை கவர உதவ சிவாவை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தவர்.

sivakarthikeyan

இப்படி ஒரு நிலையில், ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கசப்பானது மோதலாக வெளியாகி குடும்ப பிரச்சினையாகவும் வெளியே தெரிந்தது. சிவகார்த்திகேயன் இமேஜ் மீது விழுந்த அது பெரும் அடியாக அமைந்தது. அப்படி ஒரு பிரச்சனை அவருக்கு வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் உண்மை எது என்பதை யாருக்கும் தற்போது வரை தெரியாத சஸ்பென்ஸ் ஆக இருந்து வருகிறது. இமான் மற்றும் அவரது மனைவி பிரிந்துவிட்ட நிலையில், தற்போது இமான் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

sivakarthikeyan imman

இந்நிலையில், தற்போது சிவகார்த்திகேயனின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் இமானிடம் மன்னிப்பு கோரி உள்ளார். அது பழைய வீடியோ தான். அதில், பேசும்போது நான் ஒருவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால், அது இமான் அண்ணாவிடம் தான். கொஞ்சம் படங்களில் பிசியாக இருந்தேன். அவரைப் பார்த்து பேச முடியவில்லை. நாங்கள் குடும்பமாக ஒன்றாக சாப்பிட போவதெல்லாம் இப்போது நடப்பதில்லை. இது இமான் அண்ணாவுக்கு அப்செட் ஆகிடுச்சு. நான் அவரை அண்ணா என்று கூப்பிடுவேன். அவரும் தம்பி என்று தான் கூப்பிடுவார். எந்த ஒரு ஈகோவும் இருக்காது. அதேபோல், அண்ணன் என்ற ஒரு பயம் இருந்துகிட்டே இருக்கும் என்று சிவா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?