சம்பவம் தரமா செஞ்சியிருக்காங்க… இணையத்தை கலக்கும் அயலான் Making video!
Author: Rajesh17 January 2024, 7:11 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு என பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
அதிரடி – திரில்லர் கதைக்களத்தில் சைன்ஸ் பிக்ஷன் திரைப்படமாக உருவாகிய திரைப்படம் இந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வந்தது. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் வெற்றி பெற்றுவிட்டது.
இப்படத்தினை தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான கொட்டப்படி ஜே ராஜேஷ் தனது KJR தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். இதோ அந்த வீடியோ: