SK மனைவியை தேட ஆரம்பித்த நெட்டிசன்கள்.. ஆயுத பூஜை கொண்டாட்டத்தால் சிக்கிய சிவகார்த்திகேயன்..!

Author: Vignesh
24 October 2023, 3:22 pm

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.

பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார்.தற்போது சிவகார்த்திகேயன் கைவசம் அயலான் திரைப்படம் உள்ளது.

sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் ஆயுதபூஜையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் மனைவி குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், ஒரு சில நெட்டிசன்கள் சிவகார்த்திகேயனின் மனைவி மற்றும் குழந்தைகளை எங்கே என கேட்டும், சிவகார்த்திகேயனின் நிறுவனத்தில் ஒரு பெண் கூட இல்லையா? என கேள்வி எழுப்பியும், தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளனர். முன்னதாக கடந்த வாரம் நடிகர் சிவகார்த்திகேயன் மீது இசையமைப்பாளர் டி.இமான் போட்ட குண்டு ஒரு வாரமாக இணையத்தில் மிகப்பெரிய புயலை கிளப்பி வருகிறது.

sivakarthikeyan-updatenews360

மேலும், சிவகார்த்திகேயனை இனிமேல் வீட்டுக்கு கூப்பிட அனைவரும் பயப்படுவார்கள் என்று பலரும் அவரை கொச்சைப்படுத்த ஆரம்பித்துவிட்டனர். மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் விவகாரத்தால் அவரது மனைவி ஆர்த்தி சிவகார்த்திகேயனிடம் பேசுவதில்லை என்றும், குழந்தைகளை அழைத்துக்கொண்டு தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் பலர் கூறி வருகின்றனர்.

sivakarthikeyan-updatenews360

சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக விஜய் டிவி பிரபலங்கள் பலரும் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தனது தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வரும் சிவகார்த்திகேயன், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனது அலுவலகத்தில் ஆயுதபூஜையை மகிழ்ச்சியுடன் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 836

    0

    2