அஜித்தையே ஆஃப் செய்த அமரன்… ஒட்டுமொத்த பாக்ஸ் ஆபிஸையே அதிர வைத்த எஸ்கே!

Author: Udayachandran RadhaKrishnan
2 November 2024, 2:45 pm

டிவியில் பிரபலமாகி சினிமாவில் கால் பதித்த சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக வலம் வருகிறார். நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலக உள்ளதால் அவர் இடத்தை எஸ்கே நிரப்புவார் என நம்பப்படுகிறது.

அதுக்கு ஏற்றார் போல கோட் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த சிவகார்த்திகேயனிடம் விஜய் துப்பாக்கியை கொடுத்த காட்சி கோலிவுட் ரசிகர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.

தற்போது தீபாவளியை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம், மேஜர் முகுந்த் குறித்த வாழ்க்கை படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எகிறியது.

இதையும் படியுங்க: தவெகவுக்கு தாவும் பிரபல நடிகை? பாஜகவுக்கு டாட்டா காட்டுகிறாரா?

அதன்படியே படம் தீபாவளிக்கு வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. 2 நாள் வசூல் நிலவரம் பாக்ஸ் ஆபிஸ்சை அதிர வைத்துள்ளது.

முதல் நாள் வசூலில் அமரன் படம் கெத்து காட்டியுள்ளது. கோட் படம் முதல் நாள் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ரூ.38 கோடி வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் அமரன் திரைப்படம் 42.3 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. இன்னொரு விஷயம் என்னவென்றால் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் முதல் நாள் வசூலை அமரன் முறியடித்துள்ளது.

அதே தனுஷின் ராயன் திரைப்படம் கூட முதல் நாள் இந்த வசூலை செய்யவில்லை. அமரன் படம் அதை முறியடித்துள்ளது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். விஜய் சொன்னது போல் அந்த இடத்தில் எஸ்கே தான் என்றும் நெடிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • vadivelu told about that his own dialogue used as title for many films எனக்கே கம்பி நீட்டிட்டாங்க, நான் பட்ட பாடு இருக்கே- புலம்பித் தள்ளிய வடிவேலு