தீவிர ரசிகைக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த சர்ப்ரைஸ்…என்னன்னு தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆவீங்க ..!

Author: Selvan
26 November 2024, 3:20 pm

ரசிகைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய SK

தமிழ் திரையுலகில் குட்டிஸ் முதல் பாட்டிஸ் வரை அனைவரையும் தன்னுடைய அசுர நடிப்பால் கவர்ந்து பட்டி தொட்டி எங்கும் கலக்கி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

சின்னத்திரையில் கலக்கி தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி பின்பு தனுஷின் 3 திரைப்படம் மூலம் வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்து தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார்.

Sivakarthikeyan video call birthday wish

நடிப்பதோடு இல்லாமல் தனியாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி கனா,குரங்கு பெடல், கொட்டுக்காளி,வாழ் போன்ற நல்ல திரைப்படங்களை தயாரித்து வெற்றி பெற்றுள்ளார்.

சமீபத்தில் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணத்துக்கு நேரில் சென்று வாழ்த்த முடியாத காரணத்தினால்,வீடியோ கால் மூலம் மணமக்களை வாழ்த்திய வீடியோ வைரலானது.

இதையும் படியுங்க: ஜெயம் ரவி போட்ட கண்டிஷன்கள்…அதிர்ச்சியில் படக்குழு..!சிவகார்த்திகேயனுக்கு பதிலடியா.?

அதன் பின்பு தன்னுடைய மனைவியின் பிறந்தநாளுக்கு அமரன் உடையில் சென்று சர்ப்ரைஸ் கொடுத்தார்.

Sivakarthikeyan surprises and celebrations

தற்போது தன்னுடைய தீவிர ரசிகையின் பிறந்த நாளுக்கு வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்து அதனை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 126

    0

    0