பிரபல பாலிவுட் நடிகரிடம் இருந்து அழைப்பு…சிவகார்த்திகேயனுக்கு அடித்த ஜாக்பாட்…!
Author: Selvan7 January 2025, 2:55 pm
அமீர்கான் தயாரிப்பில் நடிக்கும் SK..!
தமிழ் சினிமாவில் அசுர வேகத்தில் தன்னுடைய திறமையால் வளர்ந்து வந்து ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் ஆரம்பத்தில் சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு,பின்பு நிகழ்ச்சி தொகுப்பாளராக ரசிகர்களை கவர்ந்து,தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.
முதலில் காமெடி கலந்த குடும்ப படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்த இவர் தற்போது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து,தன்னுடைய முழு உழைப்பை போட்டு பல படங்களை ஹிட் கொடுத்து வருகிறார்.இவருடைய நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம் உலகளவில் இவருக்கு பெரும் புகழை பெற்றுத்தந்தது.அந்த படத்துக்காக தன்னுடைய உடல் எடையை அதிகரித்து ஒரு ராணுவ வீரராக வாழ்ந்திருப்பார்.
இதையும் படியுங்க: கணவரிடம் சிக்கி தவிக்கும் கொலு கொலு நடிகை…வாழ்க்கையும் போச்சு சினிமாவும் போச்சு..காரணம் அந்த நடிகர்கள் தான்..!
அமரன் படத்தை பார்த்த பல சினிமா பிரபலங்கள் சிவகார்த்திகேயனை வெகுவாக பாராட்டி வந்தனர்.அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல பாலிவுட் நடிகர் அமிர்கானுடன் நடந்த சந்திப்பை பற்றி பகிர்ந்துள்ளார்.அதில் “அமீர்கான் என்னிடம் பேசும் போது நீங்கள் விரைவில் ஹிந்தியில் ஹீரோவாக நடிக்க வேண்டும்,உங்களுடைய முதல் ஹிந்தி படம் என்னுடைய தயாரிப்பில் தான் இருக்கும்,விரைவில் நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள்”என்று கூறியதாக சிவகார்த்திகேயன் அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார்.
இதன்மூலம் சிவகார்த்திகேயன் விரைவில் பாலிவுட்டில் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.