அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் – செம லவ்வா இருக்கே – வீடியோ!

Author:
13 November 2024, 10:45 pm

நடிகர் சிவகார்த்திகேயன்:

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளிவந்து திரையரங்கில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் அமரன். இந்த திரைப்படத்தில் மறைந்த ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜன் ஆக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார் .

sivakarthikeyan

இந்த திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது. இதுவரை ரூ. 250 கோடியை தாண்டி வசூலில் மாபெரும் சாதனை படைத்திருக்கிறது. இதனால் சிவகார்த்திகேயன் கமல்ஹாசன், ரஜினி, விஜய், அஜித், வரிசையில் அடுத்ததாக 250 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய நடிகராக பார்க்கப்படுகிறார் .

மகுடம் சூட்டிய அமரன்:

இதனால் இவரது சம்பளமும் பல மடங்கு அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ உடையிலேயே அதாவது அமரன் படத்தின் கெட்டப்பிலே தன்னுடைய அன்பு மனைவியான ஆர்த்திக்கு பிறந்தநாள் அன்று சர்ப்ரைஸ் ஆக சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் .

sivakarthikeyan-wife

அமரன் கெட்டப்பில் சர்ப்ரைஸ்:

சற்று நேரம் பின்னால் அமைதியாக நின்று கொண்டு இருந்த சிவகார்த்திகேயனை சட்டென பார்த்த அவரது மனைவி ஆர்த்தி கொஞ்சம் பயத்துடன் ஷாக் ஆகிவிட்டார். அதன் பின்னர் அவரை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தினார். இந்த க்யூட்டான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Enforcement Directorate raids famous actor's house.. Arrest soon?பிரபல நடிகர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. விரைவில் கைது? ரூ.5.90 கோடி பறிமுதல்!