“என் சந்தோஷ கண்ணீரே”…. திருமண நாளில் மனைவியை குறித்து சிவகார்த்திகேயன் உருக்கம்!

Author: Shree
27 August 2023, 5:15 pm

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பெரிய விஷயம் என்று தான் சொல்ல வேண்டும். தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் உச்ச நடிகராக வளர்ந்து நிற்கிறார். எந்த ஒரு பின்புலனும் இல்லாமல், டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வலம் வந்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

Maan Karate Success Meet with Sivakarthikeyan, Hansika Motwani

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தபடாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், ரெமோ, டாக்டர் உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடிப்பையும் தாண்டி தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி அதிலும் வெற்றி பயணத்தை துவக்கியுள்ளார். மேலும் பாடலாசிரியாகராகவும் வலம் வருகிறார். இப்படி தன் திறமையை வெளிப்படுத்தி பன்முக திறமை மூலம் வெற்றி கொடி நாட்டி வருகிறார்.

இவர் கடந்த 2010ம் ஆண்டு தன்னுடைய மாமா மகளான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருகிறார்கள். இந்நிலையில் சிவகார்த்திகேயன் இன்று தனது 13வது திருமண நாளை மனைவியுடன் கொண்டாடியுள்ளார். ஆர்த்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, “என் சந்தோஷ கண்ணீரே” என கேப்ஷன் கொடுத்து காதலுடன் வாழ்த்து கூறியுள்ளார். இதையடுத்து விஜே அர்ச்சனா, நடிகை நீலிமா ராணி உள்ளிட்ட பிரபலங்கள் இந்த அழகிய ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ