அக்காவுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த பிறந்த நாள் பரிசு.. வேற லெவல் கிப்ட் போங்க ..!

Author: Selvan
4 December 2024, 7:05 pm

சிவகார்த்திகேயனின் குடும்ப பாசம்

சின்னத்திரையில் அடியெடுத்து வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் தன்னுடைய திறமையால் தன்னைத்தானே செதுக்கி,தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக வலம் வருகிறார்.

Sivakarthikeyan birthday wishes for sister

இவர் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளிவந்த அமரன் திரைப்படம் சக்க போடு போட்டு வசூலை அள்ளியது.இதன்மூலம் சிவகார்த்திகேயன் எக்ஸ்பிரஸ் வேகத்தில் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி பிஸியாக இருக்கிறார்.

இவர் என்ன தான் சினிமாவில் அதிக நேரம் செலவு பண்ணாலும்,தன்னுடைய குடும்பத்தின் மீது அதிக பாசத்தை காட்டி,அவர்களுடன் தன்னுடைய நேரத்தை செலவழித்தும் வருகிறார்.

இதையும் படியுங்க: கூலி திரைப்படத்தின் 2-வது ஹீரோயின் இவங்களா…! லோகேஷின் தரமான சம்பவம் லோடிங்..!

சிவகார்த்திகேயனின் இன்ஸ்டாகிராம் பதிவு

அந்தவகையில் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது அக்காவுக்கு பிறந்தால் வாழ்த்துக்களை தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “எனது மிகப்பெரிய உத்வேகமான எனது அக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறி..அக்கா நீ குழந்தை பெற்ற பிறகும் 38 வயதில் மருத்துவத்துறையில் எம்.டி பட்டம் பெற்றாய். இது மட்டும் இல்லாமல் 42 வது வயதில் தங்கப் பதக்கத்துடன் மெரிட்டில்,எஃப்.ஆர்.சி.பி படிப்பினையும் முடித்தாய்.உன்னை நினைத்து உண்மையிலேயே அப்பா பெருமைப்படுவார்.மீண்டும் ஒருமுறை பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா,உனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் அத்தானுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,பிறந்த நாள் பரிசாக விலை உயர்ந்த மினி கூப்பர் காரை அன்பாக கொடுத்துள்ளார். சிவகார்த்திகேயனின் இந்தப் பதிவு மற்றும் பரிசு ரசிகர்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

  • Tamil actress Rambha comeback ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை ரம்பா…ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ்..!
  • Views: - 123

    0

    0