பிரபல நடிகையுடன் சிவகார்த்திகேயன் டேட்டிங்? கொந்தளித்த குடும்பம்.. மனைவி போட்ட கண்டிஷன்!!!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2023, 2:01 pm

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பெரிய விஷயம் என்று தான் சொல்ல வேண்டும். எந்த ஒரு பின்புலனும் இல்லாமல், டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வலம் வந்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி அதிலும் வெற்றி பயணத்தை துவக்கியுள்ளார்.

மேலும் பாடலாசிரியாகராகவும் வலம் வருகிறார். இப்படி தன் திறமையை வெளிப்படுத்தி பன்முக திறமை மூலம் வெற்றி கொடி நாட்டி வருகிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வந்த படம் பிரின்ஸ். படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனால் மீண்டும் தனது ஆஸ்தான நாயகியுடன் இணைந்து நடிக்க முடிவெடுத்துள்ளார்.

டாக்டர் படம் மூலம் சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகன் ஜோடி பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து டான் படத்தில் இந்த ஜோடி இணைந்தது. இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதனிடையே, சிவகார்த்திகேயனும், பிரியங்கா மோகன் குறித்த கிசுகிசு சமூகவலைதளங்களில் வைரலானது. இது அவரது மனைவியின் பார்வைக்கும் எட்டியதாகக் கூறப்படுகிறது.

இப்படி இருக்கையில், சிவகார்த்திகேயனுடன் மீண்டும் பிரியங்காவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இந்த விஷயம் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி காதுக்கு சென்றதால், அவர் சூடானதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

மறுபடியும் பிரியங்காவுடன் நடித்தால் கிசுகிசு எழும். அதனால் இனி அவருடன் நடிக்கக்கூடாது என கண்டிஷன் போட்டுள்ளதாகவும் அதில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் தனது அடுத்த படத்திற்கு சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்த மிருணாள் தாகூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. இதுகுறித்து தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

  • Amaran Conducted Grand Ceremony of Success Meet கொண்டாடப்படும் அமரன்.. பிரம்மாண்ட விழா நடத்தும் படக்குழு : சிறப்பு விருந்தினர் இவருதான்!
  • Views: - 12225

    68

    50