தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.
பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார்.தற்போது சிவகார்த்திகேயன் கைவசம் அயலான் திரைப்படம் உள்ளது.
சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று இசையமைப்பாளர் டி இமான் குற்றச்சாட்டை பதிவு செய்திருந்தார். இந்த விவகாரம் பெரியளவில் பேசப்பட்ட நிலையில், இமானின் முன்னாள் மனைவி மோனிகா சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேசினார்.
சிவகார்த்திகேயனை இனிமேல் வீட்டுக்கு கூப்பிட அனைவரும் பயப்படுவார்கள் என்று பலரும் அவரை கொச்சைப்படுத்த ஆரம்பித்துவிட்டனர். மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் விவகாரத்தால் அவரது மனைவி ஆர்த்தி சிவகார்த்திகேயனிடம் பேசுவதில்லை என்றும், குழந்தைகளை அழைத்துக்கொண்டு தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் பலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், வலை பேச்சு பிஸ்மி சிவகார்த்திகேயன் செயலால் அவரது மார்க்கெட் காலி என்றும், துரோகத்திற்கான பலனை சிவகார்த்திகேயன் அனுபவிச்சே ஆக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சித்ரா லட்சுமணன் பேசுகையில், இமான் குற்றச்சாட்டால் சிவகார்த்திகேயனுக்கு மன அழுத்தத்திற்கு ஆளாகலாமே தவிர மார்க்கெட்டுக்கு பாதிப்பு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
This website uses cookies.