கல்யாணத்துக்கு முன்னாடியே அந்த தப்பு பண்ணிட்டேன்.. வீட்டுக்கு தெரியாமல் வேறு வீட்டில் தங்கிய SK..!

Author: Vignesh
15 November 2023, 12:23 pm

கடந்த சில நாட்களாக சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமானின் சண்டை தான் சினிமாவின் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. பிரபல இசையமைப்பாளர் டி. இமான் சமீபத்திய பேட்டி ஒன்றில், ” சிவகார்த்திகேயன் தன்னை ஏமாற்றிவிட்டதாக. அவர் மிகப்பெரிய துரோகி என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், “சிவகார்த்திகேயன் கடின உழைப்பாளி என்பதற்கு மாற்று கருத்தே இல்லை. மனம் கொத்தி பறவை படத்தில் ஆரம்பித்த அவருடனான பயணம் பல படங்களில் தொடர்ந்தது. ஆனால் அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்.

d-imman-1-1

அவரை நான் மன்னிக்கவே மாட்டேன். மேலும், இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று தடாலடியாக கூறினார். இவ்வளவு வெறுப்புக்கு என்ன காரணம் என கேட்டதற்கு… சம்பவத்தை வெளியில் சொல்ல முடியாது. பார்ப்பதற்கு தான் அவர் நல்ல மனிதர் என்னிடம் அன்பாக பேசிக்கொண்டே எனக்கு எதிரான வேலைகள் செய்துவந்ததை நான் தாமதமாக தான் புரிந்துக்கொண்டேன் என தெரிவித்திருந்தார். இச்சம்பவத்தை அடுத்து இருவர் மீதும் சந்தேகித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

sivakarthikeyan-updatenews360

சமீபத்தில் கூட அவரது மனைவியை பேட்டி எடுத்த வீடியோவில், சிவகார்த்திகேயனை டைம் பாஸ்-க்கு திருமணம் செய்தேன் என்று அவரது மனைவி கூறியது வைரலானது. தற்போது அவரது அக்கா திருமணத்தில் செய்த ஒரு ஃபிராங்க் பிரச்சனையில் முடிந்திருக்கிறதாம்.

sivakarthikeyan-updatenews360

அக்கா நிச்சயம் முடிந்த சமயத்தில் சகோதரியிடம் ஃபிராங்க் செய்ய, ஜாலியாக ஏதோ பண்ண போய் குடும்பத்தில் பெரிய பிரச்சனையை உண்டு பண்ணியதாம். இதனால் இப்படியாகிவிட்டதே என்று வீட்டிற்கு போகாமல் ஒரு நாள் இரவு முடுக்க நண்பர் வீட்டில் தங்கியிருக்கிறார். அதன்பின் குடும்பத்தினர் சிவகார்த்திகேயனை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

  • Aamir Khan Inroduce his 3rd lover 60 வயதில் 3வது திருமணம்… கல்யாண வயதில் உள்ள மகனை மறந்த பிரபல நடிகர்!