சோதனைமேல் சோதனை போதுமடா சாமி… தலையில் துண்டு போட்டு மூலையில் உட்கார்ந்த SK!

Author: Rajesh
6 December 2023, 6:57 pm

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.

imman sivakarthikeyan

பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார்.

தற்போது சிவகார்த்திகேயன் கைவசம் அயலான் திரைப்படம் உள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பால சரவணன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். 2017ம் ஆண்டே துவங்கிய இப்படம் சில பிரச்சனையால் 5 வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இப்படியான நேரத்தில் இசையமைப்பாளர் டி. இமான் சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார். அவரை நான் மன்னிக்கவே மாட்டேன். மேலும், இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று பேட்டி ஒன்றில் கூறியது சினிமா வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை இமான் மனைவியுடன் சிவகார்த்திகேயன் தகாத உறவு வைத்திருந்திருக்கிறார். அதைத்தான் இமான் துரோகம் என சொல்கிறார் என்றெல்லாம் கண்ணு, காது, மூக்கு வைத்து இஷ்டத்துக்கும் வதந்திகள் எழுதி வெளியிட்டிருந்தது பரபரப்பான செய்தியாக பேசப்பட்டு வந்தது.

அந்த பிரச்சனை ஓய்வதற்குள் அடுத்த பிரச்சனை சந்தித்துள்ளார் சிவகார்த்திகயேன். ஆம், SK 21 திரைப்படத்திற்கு கமல் ஹாசன் பட்ஜெட் விஷயத்தில் முடியாது என கூறி கைவிரித்துவிட்டாராம். இதனை அறிந்த பலரும் என்ன இது சிவகார்த்திகேயனுக்கு மூச்சு விடாமல் பிரச்சனை வந்துக்கொண்டே இருக்கிறது. பாவம் மனுஷன் என கூறி வருகிறார்களாம்.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?
  • Close menu